IPL 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு சூப்பர் சலுகை.. டிக்கெட் இருந்தா போதும்... பேருந்தில் இலவசமா போலாம்!

1 week ago 3
ARTICLE AD

சென்னையில் நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் (IPL-2026) கிரிக்கெட் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்கு, மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுழைவுச் சீட்டு இருந்தால் இலவசப் பயணம்

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள், தங்களின் செல்லுபடியாகும் கிரிக்கெட் போட்டி நுழைவுச் சீட்டை நடத்துநரிடம் காண்பித்து, மாநகரப் பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்துகள் நீங்கலாக) கட்டணமின்றி பயணிக்கலாம். போட்டி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த பிறகு மூன்று மணி நேரத்திற்கும் இந்தப் பயண சலுகை பொருந்தும். இந்தச் சலுகையானது சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திடம் உரிய கட்டணம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.

சிறப்பு பேருந்து மற்றும் சிற்றுந்து சேவைகள்

போட்டி நாட்களில் ரசிகர்கள் சிரமமின்றி மைதானத்திற்கு வந்து செல்ல, சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. போட்டி முடிந்ததும் ரசிகர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக, மைதானத்திற்கு அருகில் உள்ள பின்வரும் முக்கிய இடங்களில் சிறப்பு பேருந்துகள் நிறுத்தப்படும்:

அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம்

தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிறுத்தம்

சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம்

அண்ணா சாலை (ஓமந்தூரார் மருத்துவமனை அருகில்)

இந்த இடங்கள் அனைத்தும் மைதானத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ளன.

கூடுதல் வசதி: இணைப்புச் சேவை (Shuttle Service)

ரசிகர்களின் வசதிக்காக, அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை முதல் எம்.ஏ. சிதம்பரம் மைதானம் வரை சிறப்புச் சிற்றுந்து (Shuttle service) சேவைகள் இயக்கப்பட உள்ளன. ரசிகர்கள் இந்த இணைப்புச் சேவையைப் பயன்படுத்தி மைதானத்தை எளிதில் அடையுமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, கிரிக்கெட் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஒத்துழைக்குமாறு மாநகரப் போக்குவரத்துக் கழகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Read Entire Article