IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?

1 week ago 3
ARTICLE AD

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடர் தற்போது அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி, குஜராத், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளது. ஆர்சிபி மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகள் குவாலிஃபயர் 1 போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

எலிமினேட்டரில் ஆடப்போவது யார்?

எலிமினேட்டர் தொடரில் சன்ரைசர்ஸ் அணியுடன் ஆடப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் ரேஸில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மல்லுகட்டி வருகின்றனர். நேற்று லக்னோ அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்தியுள்ளது.

முடிவு செய்யப்போகும் மும்பை?

இன்னும் சற்று நேரத்தில் மும்பை அணியுடன் நடக்க உள்ள போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்று தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும். மும்பை அணி வெற்றி பெற்றால் பஞ்சாப் ப்ளே ஆஃப்  ஏறத்தாழ உறுதியாகும். ஏனென்றால், ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்து இன்று இரவு நடக்கும் கடைசி லீக் போட்டியில் டெல்லி அணியை கொல்கத்தா அணி மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே அவர்களின் ப்ளே ஆஃப் வாய்ப்பு சாத்தியமாகும். அது மிக சவால் ஆகும்.

இதனால், ப்ளே ஆஃப் தொடரை விட்டு வெளியேறியுள்ள மும்பை அணியே எலிமினேட்டரில் ஆடப்போவது யார்? என்பதை தீர்மானிக்க உள்ளது. மும்பை அணியைப் பொறுத்தமட்டில் அந்த அணியில் பலமிகுந்த வீரர்கள் இருந்தாலும் அவர்கள் ஒருங்கிணைந்த அணியாக சிறப்பாக இதுவரை ஆடவில்லை. டாப் ஆர்டர் சொதப்பல், மிடில் ஆர்டர் நிலையற்ற தன்மை, பந்துவீச்சிலும் தாக்கம் ஏற்படுத்தாதது என அவர்கள் மோசமாக ஆடி வரும் சூழலில் இன்று வெற்றி பெறுவார்களா? என்பதும் கேள்விக்குறியே ஆகும்.

விறுவிறுப்பு:

இதனால், ப்ளே ஆஃப்-க்கு செல்ல துடிக்கும் ராஜஸ்தான் அணிக்கு மும்பை அணி முட்டுக்கட்டை போடுமா? அல்லது மும்பையை துவம்சம் செய்து ராஜஸ்தான் அணி எலிமினேட்டருக்குச் செல்லுமா? என்பது இன்று மாலைக்குள் தெரிய வரும். இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

மும்பை அணியில் ரோகித், ரிக்கெல்டன், நமன்தீர், திலக் வர்மா, பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் என பெரிய பட்டாளமே உள்ளனர். ராஜஸ்தான் அணியில் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், துருவ் ஜுரல், ரியான் பராக், ஹெட்மயர் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சும் இரு பக்கமும் வலுவாக இருக்கும் சூழலில் வெல்லப்போவது யார்? என்பதை காணலாம்.

Read Entire Article