IPL 2026 RCB vs MI: ஒரே ஓவரில் 2 முறை அவுட்! ஆனாலும் அவுட்டாகாத ரூதர்ஃபோர்ட்! மும்பை - ஆர்சிபி போட்டியில் சுவாரஸ்யம்!

1 day ago 1
ARTICLE AD

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்றாலே விறுவிறுப்பிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமே இருக்காது. அந்த வகையில், நேற்று மும்பை வான்கடை மைதானத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது.

241 ரன்கள் டார்கெட்:

இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட், கோலி, ரஜத் படிதார், டிம் டேவிட் அதிரடியால் 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர். இமாலய இலக்குடன் ஆடிய மும்பை அணிக்கு ரிக்கெல்டன் அதிரடி தொடக்கம் அளிக்க முயற்சித்தாலும் ஆர்சிபி சுயாஷ் சர்மா, குருணல் பாண்ட்யா பந்துவீச்சால் கட்டுப்படுத்தி ஆட்டத்தை தங்கள் வசப்படுத்தியது,

இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றிக்க முக்கிய காரணமாக இளம் வீரர் ரஷீக் சலாம்தர் திகழ்ந்தார். அவர் மிகவும் முக்கியமான நேரத்தில் ரிக்கெல்டன், சூர்யகுமார், பாண்ட்யா ஆகியோருக்கு எதிராக கட்டுக்கோப்பாக பந்துவீசினார். அப்போது, அவர் திடீரென காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பாதியிலே வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

2 முறை அவுட்டாகியும் நாட் அவுட்:

அவர் 16வது ஓவரை திறம்பட வீசி நமன்தீரை அவுட்டாக்கிய அடுத்த பந்திலே காயம் காரணமாக பாதியிலே வெளியேறினார். இதையடுத்து, அவருக்கு பதிலாக அந்த ஓவரின் எஞ்சிய ஒரு பந்தை வீச ரொமாரியோ ஷெப்பர்ட் வந்தார். அவர் அந்த ஓவரில் தான் வீசிய எஞ்ஜிய ஒரு பந்திலே ரூதர்ஃபோர்டை அவுட்டாக்கினார். ஆனால், அந்த பந்து நோ பாலானது. இதையடுத்து, அவர் மீண்டும் வீசிய ஃப்ரீ ஹிட்டிலும் ரூதர்ஃபோர்ட் அதே முறையில் அவுட்டானார். ஆனால், ஃப்ரீ ஹிட் என்பதால் அவர் ஆட்டமிழக்கவில்லை.

கடைசி ஓவரில் 26 ரன்கள்:

இதையடுத்து, மும்பை வெற்றிக்கு கடைசி ஓவரில் 44 ரன்கள் தேவைப்பட்டது. ரஷீக் இல்லாத காரணத்தால் மீண்டும் ஷெப்பர்ட் பந்துவீசினார். பனிப்பொழிவு காரணமாகவும், மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததாலும் அந்த ஓவரின் முதல் பந்தை ரூதர்ஃபோர்ட் சிக்ஸருக்கு விளாசினார். அந்த ஓவர் தொடங்கும் முன்னரே ஆட்டம் ஆர்சிபி வசம் சென்றதால் ஷெப்பர்ட் அழுத்தம் இல்லாமல் வீசினார். அடுத்த பந்து ஒயிடாகச் சென்றது. அடுத்த பந்தை டாட் பாலாக வீசினார்.

அடுத்த பந்து சிக்ஸருக்கு சென்றது. அடுத்த பந்து டாட் பாலானது. அடுத்த பந்து ஒயிடாகச் சென்றது. கடைசி 2 பந்து சிக்ஸருக்குச் சென்றது. அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் மும்பைக்கு கிடைத்தாலும் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரூதர்ஃபோர்ட் அபாரம்:

ஒரே போட்டியில் ஷெப்பர்ட் 2 முறை அவுட்டாக்கிய ரூதர்ஃபோர்ட் ஆட்டமிழக்காமல் கடைசியில் மும்பை அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியைத் தழுவ உறுதுணையாக இருந்தார். ரூதர்ஃபோர்ட் 31 பந்துகளில் 1 பவுண்டரி 9 சிக்ஸருடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கட்டுக்கோப்பான பந்துவீச்சு:

ஆர்சிபி அணிக்காக புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 38 ரன்களும்,  குருணல் பாண்ட்யா 4 ஓவர்களில் 26 ரன்களும் விட்டுக்கொடுத்து கட்டுக்கோப்பாக வீசினர். ரஷீக் சலாம் தர் 2.5 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். சுயாஷ் சர்மா 47 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் ரிக்கெல்டன், திலக் வர்மா ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் அவுட்டாக்கி ஆட்டத்தையே மாற்றினார். ரூதர்ஃபோர்ட் மற்றும் ஷெப்பர்ட் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article