சமீபத்தில் விமான நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வந்த பிறகு, ஏராளமான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்படைந்தனர். இந்தநிலையில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு, சுமார் 22 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பாதிப்பு

விமானிகள் மற்றும் விமான பயணிகளின் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ விமான நிறுவனம் கடந்த டிசம்பரில், 2500-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர். பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில் இண்டிகோ நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள்

டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமான போக்குவரத்து இயக்குனரகம் பயனியரின் பாதுகாப்பு கருதி விமான பணியாளர்களுக்கு பணிநேர கட்டுப்பாடுகள் விதித்தது. இதன்படி விமானங்கள் அந்த கட்டுப்பாட்டின் அடிப்படையில் இயங்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டது. இதன்படி விமானி மற்றும் பிற ஊழியர்களுக்கு, வாரத்தில் 48 மணி நேரம் ஓய்வு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இரவு நேரத்தில் ஒரு விமானி, இரண்டு முறை மட்டுமே விமானத்தை தர இயங்க அனுமதி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

இதை சமாளிக்க முடியாமல் இண்டிகோ நிறுவனம் திணறியது. இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் 3 முதல் 5 வரை 2500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 1800க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றன. இதனால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்படைந்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விமான போக்குவரத்து இயக்குனரகம் நடத்திய விசாரணையில் இண்டிகோ நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

22 கோடி ரூபாய் அபராதம்

இண்டிகோவுக்கு மொத்தம் 22 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முறையாக விமானத்தை இயக்காததால் நாள் ஒன்றுக்கு 30 லட்ச ரூபாய் என 68 நாட்களுக்கு 20.40 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக குளறுபடிக்கு 1.80 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நீண்ட கால சீர்திருத்தங்களை உறுதி செய்ய 50 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.