<p>உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a>. இவர் நடிப்பில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இந்தியன் திரைப்படம். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசனின் அரசியல் பயணம் உள்ளிட்ட பல காரணங்களால் படம் தாமதமானது. </p>
<p>இந்த சூழலில், ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் பாரா படல் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதனால், கமல் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். </p>
<p>இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.</p>