India US Oil: ”சொல்வதை செய்யும் இந்தியா” பிரதமர் மோடியை போட்டு கொடுத்த ட்ரம்ப் டீம்? - ரஷ்ய ஆயில்

1 month ago 5
ARTICLE AD

India US Russia Oil: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அனுமதி கொடுத்தது தொடர்பான அமெரிக்காவின் கருத்து பிரதமர் மோடியின் ஆளுமை தொடர்பாக கேள்வி எழுப்புகிறது.

இந்தியாவிற்கு அனுமதி ஏன்? - அமெரிக்கா விளக்கம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருவதால, மேற்கு ஆசியாவில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதை தடுக்க,  ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அனுமதி அளித்ததாகவும், அதன் விளைவாக எண்ணெயானது கப்பலில் ஏற்றப்பட்டு பயணத்தை தொடங்கி உள்ளதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசெண்ட், “உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகம் சீராக உள்ளது. நட்பு நாடான இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கான விநியோகமும் தொடங்கிவிட்டது” என பேசியுள்ளார்.

”நல்லபடியாக செயல்படுகிறார்கள்”

தொடர்ந்து பேசுகையில், “இந்தியர்கள் அமெரிக்காவிற்கு மிகவும் நல்லபடியாக ஒத்துழைக்கிறார்கள். பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் என்றோம். அவர்கள் அதை அப்படியே செய்தார்கள். அதற்கு மாற்றாக அமெரிக்க எண்ணெயை பயன்படுத்த உள்ளனர். ஆனால், தற்போதையை உலக சூழலில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டு இடைவெளியை நிரப்ப, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு நாங்கள் அனுமதி அளித்துள்ளோம். ரஷ்யாவின் பிற எண்ணெய்கள் மீதான தடைகளையும் நாங்கள் நீக்கலாம். தடை விதிக்கப்பட்ட லட்சக்கணக்கான எண்ணெய் பீப்பாய்கள் கப்பல்களில் உள்ளன. சர்வதேச தேவையை உணர்ந்து, அந்த எண்ணெய் மீதான தடைகளை நீக்க அமெரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது” என அமெரிக்க அமைச்சர் பேசியுள்ளார். இதுபோக ட்ரம்ப்பின் அமைச்சர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் பலரும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அனுமதி அளித்ததாக பேசி வருகின்றனர்.

இணையத்தில் குவியும் விமர்சனங்கள்:

இந்தி மக்களுக்கு எது தேவையோ? எது சரியானதோ? அதையே செய்வோம் என மத்திய அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதோடு, வேறொரு நாட்டின் தலையிட்டால் இந்தியாவின் கொள்கைகள் மாற்றப்படாது எனவும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். ஆனால், தங்களின் அறிவுறுத்தலின்பேரிலேயே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதாகவும், தற்போது எங்களது அனுமதிக்கு பிறகே ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனில் இந்தியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தக கொள்கைகளை முடிவு செய்வது யார்?  இந்திய அரசாங்கத்தை நிர்வகிப்பது யார்? பிரதமர் மோடி அமெரிக்காவின் கைப்பாவையா?அமெரிக்காவின் வரி மிரட்டல்களுக்கு பாஜக அரசு அடி பணிந்துவிட்டதா? உலகின் விஸ்வகுரு என கூறிகொள்ளும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் தோல்வி கண்டாரா?  என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், அரசு தரப்பில் இருந்தோ அல்லது பாஜகவினரிடமிருந்தோ இதுதொடர்பாக பெரிய அளவில் எந்தவித கருத்துகளும் வெளியாகவில்லை.

Read Entire Article