India Strikes in Pakistan: பயங்கரவாதி முகாம்களை அழித்த கமிகேஸ் ட்ரோன்.. தீவிரவாதிகளை தேடிப்பிடித்து அழித்த ட்ரோன் பற்றி தெரியுமா ?

7 months ago 5
ARTICLE AD

காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் திடீரென பட்டப்பகலில் உள்ளே புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 25 குடிமக்களும், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 26 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்தியா எப்போது பதில் தாக்குதலை நடத்தும் என்றே அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த சூழலில் இந்தியா நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

திட்டத்தை செயல்படுத்தியது எப்படி ?

மத்திய அரசு இன்று மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொள்ளும் படி, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்திருந்தது. இதேபோன்று ராஜஸ்தானில் மிகப்பெரிய அளவில், போர் ஒத்திக்கு பயிற்சி நடைபெற உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இவையெல்லாம் முடித்துவிட்ட பிறகு, பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, போர் ஒத்திகை முடிந்த பிறகு தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் நம்பும் வகையில் இந்தியாவின் நடவடிக்கைகள் இருந்து வந்தது. இந்தநிலையில்தான் ஏழாம் தேதி இரவிற்கு பிறகு தாக்குதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 24 மணி நேரம் முன்னதாகவே இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியுள்ளது.

குறிப்பாக பயங்கரவாதிகள், காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரே இடத்தில் இல்லாமல் வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்துள்ளனர். இவற்றை இந்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. இறுதியாக சரியாக ஒன்பது இடங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் இந்திய தரைப்படை மற்றும் விமானப்படை இணைந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்கா கமிகேஸ் ட்ரோன்

கர்கா கமிகேஸ் என்பது இந்திய ராணுவத்தின் அதிவேக ட்ரோன். இந்த ட்ரோனை தற்கொலை ஆளில்லா விமானம் என்று அழைக்கின்றனர். அதாவது எதிரி இலக்குகளை கண்டறிந்து இது எளிதில் அழிக்கக்கூடியது. இந்திய ராணுவம் உருவாக்கியுள்ள கர்கா காமிகேஸ் ட்ரோன் ஆனது, உளவுத்துறை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு ஏரோ சிஸ்டம் ஆகும். கார்கி கேமிகேஸில் பயன்படுத்தப்படும் ட்ரோன் அதிவேக மற்றும் குறைந்த எடை கொண்ட வான்வழி வாகனம், வினாடிக்கு 40 மீட்டர் வேகம் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read Entire Article