India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!

1 year ago 6
ARTICLE AD

டி20 உலகக் கோப்பை:

கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 2 ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணிகள் எலிமேனிட் ஆகி உள்ள சூழலில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

அதேபோல், குரூப் 1 ல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பில் இருக்கிறது. இதனிடையே இன்று (ஜூன் 24) நடைபெறும் முக்கியமான போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்:

இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதன்படி 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 6 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் ஷர்மா , விராட் கோலி, ஹர்திக் பாண்டியா சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், நிதீஷ் ரெட்டி, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான் உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர்.

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), துருவ் ஜூரல் (WK), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய். ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.

Read Entire Article