IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?

2 days ago 2
ARTICLE AD

IND Vs SA 1st T20: இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூலம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹர்திக் பாண்ட்யா மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்புகிறார்.

இந்தியா - தென்னாப்ரிக்கா டி20 தொடர்:

தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வென்ற நிலையில், ஒருநாள் தொடரில் தோல்வி கண்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. தொடரை வெற்றியுடன் தொடங்கவும், நடப்பாண்டின் கடைசி தொடரில் ஆதிக்கம் செலுத்தவும் இரு அணிகளும் முனைப்பு காட்டுவதால் முதல் போட்டியிலேயே அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சூர்யகுமார் தலைமையில் இந்திய அணியும், மார்க்ரம் தலைமையில் தென்னாப்ரிக்கா அணியும் களமிறங்க உள்ளது.

போட்டி எங்கு? எப்போது?

இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி கட்டக்கில் உள்ள பரபதி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை..

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களை வென்றாலும், தனிப்பட்ட முறையில் பேட்டிங்கில் பெரிதாக சோப்பிக்க தவறுகிறார். ஆஸ்திரேலியா தொடரிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டார். இந்நிலையில் இன்றைய போட்டியிலாவது அவர் கம்பேக் கொடுப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுமுனையில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய கில், இன்றைய போட்டியில் களம் காண்கிறார். டி20 போட்டிகளுக்கு இவர் பொருந்தமாட்டார் என கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் துணை கேப்டனாக அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். ஆனாலும், பேட்டிங்கில் அண்மைக்காலமாக பெரிதாக சாதிக்கவில்லை. இந்நிலையில், அவரது கம்பேக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஹர்திக்

காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, உள்ளூர் போட்டிகளில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்த பிறகு தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.  இது அணிக்கு கூடுதல் வலுவாக பார்க்கப்படுகிறது. இதுபோக அபிஷேக் சர்மா, திலக் வர்மா, அக்சர் படேல் உள்ளிட்டோர் ஏற்கனவே நல்ல ஃபார்மில் உள்ளனர். பவுலிங் யூனிட்டும் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் மற்றும் வருண் சக்கரவர்த்தி என வலுவாக திகழ்கிறது. இதனால் அதிரடியான பேட்டிங் லைன் -அப்பை கொண்ட தென்னாப்ரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 போட்டிகளில் நேருக்கு நேர்:

டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 18 முறையும், தென்னாப்ரிக்கா 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

பரபதி மைதானம் எப்படி?

கட்டாக்கில் உள்ள பரபதி மைதானத்தில் இதுவரை மூன்று டி20 சர்வதேச போட்டிகளை நடந்துள்ளது. அவற்றில் தென்னாப்பிரிக்கா இரண்டு போட்டியில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு அணிகள் சேஸிங் மூலம் வென்றுள்ளன. ஆடுகளம் சுழல் மற்றும் வேகம் இரண்டிற்கும் சமமான உதவியை வழங்கினாலும், சிறந்த வேரியேஷன்களை கொண்ட பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது, ஏனெனில் பனி மற்றும் குளிர் காலநிலை பந்தை அதிகம் பிடிக்க அனுமதிக்காது. இது போன்ற ஒரு மேற்பரப்பில் மொத்தம் 160 ரன்கள் என்பது கடினமான ஸ்கோராக கருதப்படுகிறது.

உத்தேச ப்ளேயிங் லெவன்:

இந்தியா: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா

தென்னாப்பிரிக்கா: ஐடன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி நிகிடி

Read Entire Article