IND vs SA 2 Test: 500 ரன்களுக்கும் மேல் போன டார்கெட்.. இந்த போட்டியிலும் இந்தியாவுக்கு சங்குதானா? பயமுறுத்தும் தென்னாப்பிரிக்கா!

2 weeks ago 2
ARTICLE AD

IND vs SA 2 Test: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.

அசத்தும் தென்னாப்பிரிக்கா:

தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானாது. 288 ரன்கள் இந்தியா பின்தங்கிய நிலையில், தென்னாப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் ஃபாலோ ஆன் தரவில்லை. அதற்கு பதிலாக அவர்களே 2வது இன்னிங்சில் ஆடினார்கள்.

இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்கும் நோக்கில் ஆடிய தென்னாப்பிரிக்க அணிக்கு ரிக்கெல்டன் - மார்க்ரம் ஜோடி நிதானமாக ஆடியது. ரிக்கெல்டன் 35 ரன்களிலும், மார்க்ரம் 29 ரன்களிலும் அவுட்டாகிய நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன்களுக்கு அவுட்டானார். ஸ்டப்ஸ் - டோனி ஜோடி மிகவும் நிதானமாக ஆடியது.

500 ரன்களுக்கு மேல் டார்கெட்:

சிறப்பாக ஆடிய ஸ்டப்ஸ் அரைசதம் கடந்தார். டோனி அரைசதத்தை நெருங்கும் சூழலில் அவுட்டானார். அவர் 68 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 49 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்பு, வந்த முல்டருன் சேர்ந்து ஸ்டப்ஸ் ஆடி வருகிறார். 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை கடந்து தென்னாப்பிரிக்க அணி ஆடி வருகிறது.

தென்னாப்பிரிக்க அணி தற்போது 500 ரன்களை கடந்து இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது. இந்திய அணிக்கான இலக்கு தற்போதே 500 ரன்களை கடந்து சென்றுள்ள நிலையில், இந்திய அணி இந்த போட்டியில் வெல்வது என்பது இயலாத காரியமாக மாறியுள்ளது.

தோல்வியா? டிராவா?

இந்த போட்டியில் இந்திய அணி டிரா செய்யுமா? அல்லது தோல்வி அடையுமா? என்பதே கேள்வியாக உள்ளது. போட்டி முடிய இன்னும் ஒரு நாளுக்கும் மேல் உள்ள நிலையில், இந்திய அணி இந்த போட்டியிலும் தோல்வி அடைந்தால் இந்திய அணியின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக மாறிவிடும். இந்த போட்டியை டிரா செய்தாலும் இந்திய அணி இந்த தொடரை இழப்பது உறுதியாகும். இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் மீண்டும் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆவது உறுதியாகும்.

இந்திய அணி மோசமான நிலையில் ஆடி வரும் சூழலில், இந்த போட்டியிலும் தோல்வி அடைந்தால் மிக கடுமையான விமர்சனத்தை எதிர்கொள்ள நேரிடும். கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப்பண்ட், ஜடேஜா, துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்திய அணியின் தோல்வியை தவிர்க்க முடியும்.

தென்னாப்பிரிக்க அணியின் ஜான்சென், ஹார்மர், முல்டர், கேசவ் மகாராஜ், முத்துசாமி, மார்க்ரம் பந்துவீச்சை சமாளிப்பதற்கு இந்திய அணி சிறப்பாக பேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

Read Entire Article