இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்கார்களாக, போட்டியின் முதல் ஓவரை பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா வீசினார், 4 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். டி20 உலகக்கோப்பையில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார். அடுத்ததாக திலக் வர்மா களமிறங்கினார்.

ராக்கெட்டாக வெடித்த இஷான் கிஷன்:

ஷாஹீன் அப்ரிடி வீசிய இரண்டாவது ஓவரில் சிக்சருடன் தொடங்கினாட் கிஷன், அங்கு தொடங்கியவர் தான் சரவெடியாய் வெடித்தார், அவருக்கு பக்கபலமாக திலக் வர்மா நிற்க இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் சென்றார், 27 பந்துகளில் இஷான் கிஷன் அரைசதம் அடித்தார். முதல் 10 ஓவர்களில் பெரும்பாலான பந்துகளை இஷான் கிஷனே சந்தித்தார். 77 ரன்கள் அடித்த நிலையில் இஷான் கிஷன், சயீம் அயூப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அப்படியே இறங்கிய ரன்ரேட்:

கிஷன் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் சூர்யக்குமார் யாதவ் களமிறங்கினார், பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி அகா, ஸ்பின்னர்களை வைத்து இந்திய அணியின் ரன் ரேட்டை அப்படியே குறைத்தார், மிஸ்ட்ரி ஸ்பின்னரான உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சில் ரன் அடிக்க இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறினர், பெரிய மைதானம் என்பதாலும் பவுண்டரிகள் எதிர்ப்பார்க்க அளவிற்கு இந்திய பேட்ஸ்மேன்களால் அடிக்க முடியவில்லை, இதற்கு மத்தியில் சயீம் அயூப் தனது ஒரே ஒருவரில் திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

காப்பாற்றிய ரிங்கு - துபே:

கேப்டன் சூர்யக்குமார் யாதவ் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சில் 32 ரன்கள் எடுத்த நிலையில் 19 ஓவரில் ஆட்டமிழந்தார், இதன்பின் ரிங்கு சிங் களமிறங்கினார், ஸ்பின்னர்களை வைத்து ரன்களை கட்டுப்படுத்திய நிலையில், 20 ஓவரை துபே பவுண்டரியுடன் தொடங்க, ரிங்கு சிங் ஒரு சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து இந்திய அணி 170 ரன்களை கடந்தது, துபே 27 ரன்களில் ரன் அவுட்டாக, 4 பந்துகளை சந்தித்த ரிங்கு சிங் 11 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் தடுமாற்றம்:

176 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 2 ஓவர்களுள் 3 விக்கெட்டுகளை 13 ரன்களுக்குள் இழந்து தடுமாறி வருகிறது.