இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் (IND vs ENG 4வது டெஸ்ட்) ஜூலை 23 இன்று மான்செஸ்டரில் தொடங்குகிறது.

மான்செஸ்டர் டெஸ்ட்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்குகிறது. தொடரை வெல்லும் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும். மறுபுறம், இங்கிலாந்து இந்த போட்டியில் வென்றால் தொடரை வெல்லும்.

ஆடுகளம் எப்படி?

ஓல்ட் டிராஃபோர்டில் உள்ள ஆடுகளம் ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கமாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது. வேகத்தையும் பவுன்ஸையும் கையாள பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவார்கள். இருப்பினும், காலப்போக்கில் மான்செஸ்டர் ஆடுகளத்தின் வேகம் மிகவும் குறைந்துள்ளது.இருப்பினும் வானம் மேகமூட்டமாக இருந்தால் நிச்சயமாக இந்த மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும்.

”முன்பு போல ஸ்விங் இல்லை”

போட்டிக்கு முன்பு ஓல்ட் டிராஃபோர்டில் உள்ள ஆடுகளத்தைப் பற்றி பேசிய இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டீவ் ஹார்மிசன், ESPNcricinfo இடம், "கடந்த மூன்று மாதங்களில் இங்கிலாந்தில் எங்கும் அப்படி இருந்ததில்லை. ஆனால் எங்கும் மழை பெய்தால், அது மான்செஸ்டரில் இருக்கும். மழை பெய்யும்போது, ஆடுகளம் உயிர் பெறுகிறது. மான்செஸ்டரில் உள்ள முதல் தர கிரிக்கெட் ஆடுகளங்கள் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலத் தெரியவில்லை. முன்பு, இங்கே பவுன்ஸ் இருந்தது. கடினமான ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கைக் காணலாம். ஆனால் இப்போது எல்லாம் அப்படியே உள்ளது. மிக மிக மெதுவான மற்றும் வழுக்கும் ஆடுகளம். இது எட்ஜ்பாஸ்டனில் உள்ளதைப் போன்ற ஒரு ஆடுகளமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்."

வானிலை எப்படி?

மான்செஸ்டரில் முதல் நாளில் மழை பெய்ய 65 சதவீதம் வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 14 முதல் 19 டிகிரி வரை இருக்கும். இரண்டாவது நாளில் மழை பெய்ய வாய்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது. வியாழக்கிழமை, மான்செஸ்டரில் மழை பெய்ய 85 சதவீதம் வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 12 முதல் 21 டிகிரி வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் மேகமூட்டமான வானம் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்ய ஏற்ற சூழ்நிலைகளைக் குறிக்கிறது. எனவே, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்த மைதானத்தில் பந்துவீசுவதை விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்சூல் கம்போ அறிமுகம்?:

இந்திய அணியில் காயம் காரணமாக ஏற்கெனவெ அர்ஷ்தீப் சிங், நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளது, இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது. இருப்பினும் பும்ரா, சிராஜ் உடன் இணைந்து பந்துவீசப்போகும் அந்த மூன்றாவது பந்து வீச்சாளர் யார் என்ற கேள்வி எழும்பியிருந்தது, ரிஷப் பண்ட் வழக்கம் போல கீப்பிங் செய்வார் என்றும் அன்சூல் கம்போஜ் இப்போட்டியில் களமிறங்கலாம் என்றும் கேப்டன் சுப்மன் கில் சூசமாக தெரிவித்தார். மேலும் கருண் நாயருக்கு பதிலாக மீண்டும் சாய் சுதர்சன் களமிறங்கலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது

இந்திய உத்தேச அணி:

யஷ்யஸ்வி ஜெயஸ்வால், கே.எல் ராகுல், கருண் நாயர் அல்லது சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், சுப்மன் கில்(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது அன்சூல் கம்போஜ், குல்தீப் அல்லது ஷர்துல் தாக்கூர்