IND vs ENG: இன்னும் 9 விக்கெட்டுதான்.. கடைசி டெஸ்டில் வெல்லுமா இந்தியா? அசத்துமா இந்திய பவுலிங்..?

4 months ago 5
ARTICLE AD

IND vs ENG 5th Test:  இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

அசத்திய ஆகாஷ்தீப் - ஜெய்ஸ்வால்:

இதையடுத்து, இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து ஆடிய இந்தியா நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. நைட் வாட்ச்மேனாக ஜெய்ஸ்வாலுடன் நேற்று முன்தினம் இறக்கப்பட்ட பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தான் எப்பேற்பட்ட பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார்.

ஜெய்ஸ்வால் - ஆகாஷ்தீப் ஜோடி அபாரமாக ஆடினர். இந்த ஜோடியை எளிதில் பிரித்துவிடலாம் என்று கருதிய இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிறிஸ் வோக்ஸ் காயத்தால் விலகியதும் அவர்களுக்கு பின்னடைவானது. அட்கின்சன், டங், ஓவர்டன் ஆகிய 3 முக்கிய பந்துவீச்சாளர்கள் வீசியும் இந்த ஜோடி அருமையாக ஆடினர்.

ஜெய்ஸ்வால் சதம்:

அபாரமாக ஆடிய ஆகாஷ்தீப் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது. சிறப்பாக ஆடிய ஆகாஷ் தீப் 66 ரன்களில் அவுட்டானார். அவர் 94 பந்துகளில் 12 பவுண்டரியுடன் இந்த ரன்களை எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய கேப்டன் சுப்மன்கில் 11 ரன்களல் அவுட்டாக, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய கருண் நாயர் 17 ரன்களில் அவுட்டானார்.

அதன்பின்பு, ஜெய்ஸ்வால் - ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிறப்பாக ஆடினர். அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் சதத்திற்கு பிறகு இந்த தொடரின் கடைசி இன்னிங்சிலும் சதம் விளாசியுள்ளார். சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 118 ரன்களில் ஜோஷ் டங் பந்தில் அவுட்டானார்.

ஜடேஜா, வாஷிங்டன் அரைசதம்:

அதன்பின்பு, களமிறங்கிய துருவ் ஜோரல் ஜடேஜாவிற்கு ஒத்துழைப்பு அளித்தார். அவரும் ஜடேஜாவும் ஒருநாள் போட்டி போல ஆடினர். 46 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்த ஜோரல் அவுட்டாக, அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக ஆடினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய ஜடேஜா அரைசதம் விளாசினார். அவர் 77 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டாக, மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் அதிரடிக்கு மாறினார்.

அவர் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். இதனால், ரன் ஜெட் வேகத்தில் ஏறியது. சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசினார். அவர் 46 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 53 ரன்கள் எடுத்து அவுட்டாக இந்தியா 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

374 ரன்கள் இலக்கு:

இதனால், இங்கிலாந்து அணிக்கு  374 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு நேற்று மாலையே இந்திய அதிர்ச்சி தந்தது. சிராஜ் பந்தில் ஜாக் கிராவ்லி 14 ரன்களில் போல்டானார். டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். 3 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் தேவைப்படுகிறது. அவர்கள் கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது.

வெற்றி பெறப்போவது யார்?

2 நாட்கள்  இருப்பதால் இந்த போட்டிக்கு முடிவு கண்டிப்பாக கிடைக்கும். ஒல்லி போப், ரூட், ஹாரி ப்ரூக், பெத்தேல், ஸ்மித் என வலுவான பேட்டிங் வரிசை அவர்களுக்கு உள்ளது. சிராஜ், ஆகாஷ்தீப், பிரசித் கிருஷ்ணா வேகத்தில் ஆதிக்கம் செலுத்தினால் கண்டிப்பாக இன்றே இந்திய அணி வெற்றி பெறும். இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றால் தொடரை 2-2 என்று இந்தியா சமன் செய்யும்.

Read Entire Article