<p>ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மழையின் காரணமாக டிராவில் முடிந்தது. </p>
<h2>காபா டெஸ்ட்: </h2>
<p>இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது வருகிறது,இதன் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p>
<p>இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைப்பெற்றது, இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p>