<p>ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட் ஆனது. </p>
<h2>டாஸ் வென்று பேட்டிங்: </h2>
<p>இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ரானா அறிமுக வீரர்களாக களமிறங்கனர்.</p>