ஐஐடி சென்னையில் உள்ள பிஎஸ் பட்டப் படிப்பின் அடுத்த பேட்ச்சுக்கு விண்ணப்பிக்க மே 31-ம் தேதியை கடைசி நாளாகக் கொண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

உயர் தரமான ஐஐடி கல்வியை அதிகளவிலும், பல்வேறு பின்னணியிலுள்ள மாணவர்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இப்படிப்புகளை வயது வரம்பின்றி 12ஆம் வகுப்பு முடித்த எவரும் படிக்கலாம்.

மாணவர் சேர்க்கை தொடக்கம்

ஐஐடி சென்னை 2026 கல்வியாண்டில் பிஎஸ் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 2026 மே 31ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்த பட்டப்படிப்புகள் 4 தனித்துவமான பிரிவுகளாக வழங்கப்படுகின்றன:

பிஎஸ் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள் (BS in Data Science and Applications),

பிஎஸ் மின்னணுப் பயன்பாடுகள் BS in Electronic Systems),

பிஎஸ் மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் (BS in Management and Data Science),

பிஎஸ் வானியல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் (BS in Aeronautics and Space Technology)

இவை தனி பட்டப்படிப்பாகவோ வழக்கமான கல்லூரி பட்டப்படிப்புடன் இணைத்தோ படிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் படிப்புகள்

இப்படிப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகின்றன. கல்வியின் தரத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் உறுதிப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நேரடி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்களது வசதிக்கேற்ப படிப்பை தொடர முடியும்.

அவர்களின் கல்வி, தொழில் நோக்கங்களுக்கு ஏற்ப சான்றிதழ் (Certificate), டிப்ளமோ (Diploma), பட்டப்படிப்பு (Degree) போன்ற பல்வேறு வெளியேறும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

மே 31 கடைசி

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், பெற்றோர் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 2026 மே 31ஆம் தேதியாகும். ஆர்வமுள்ளவர்கள் ஐஐடி சென்னை https://study.iitm.ac.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த பிஎஸ் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (Joint Entrance Examination - JEE) தேர்ச்சி பெறவேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.