டான் பிக்ச்சர்ஸ் தயாரித்து தனுஷ் இயக்கி நடித்துள்ள் இட்லி கடை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நித்யா மேனன் , ஷாலினி பாண்டே ,அருண் விஜய் , சத்யராஜ் , ராஜ்கிரண் , கீதா கைலாசம் , சமுத்திரகனி , இளவரசு உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இட்லி கடை படத்தின் கதை

தேனியின் ஒரு சிறிய கிராமத்தில் இட்லி கடை நடத்தி வருகிறார் ராஜ்கிரண். அவரது மகனான தனுஷ் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக படித்து முடித்து ஊரை விட்டு கிளம்பி சென்னைக்கு செல்கிறார். அங்கிருந்து அப்படியே கிளம்பி பாங்காக்கில் மிகப்பெரிய தொழிலதிபரான சத்யராஜிடம் வேலை செய்கிறார் நாயகன் முருகன் (தனுஷ்). சத்யராஜின் மகள் மீராவுக்கும் (ஷாலினி பாண்டே) முருகனுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. சத்யராஜின் மகனான அருண் விஜய் பணத் திமிர் பிடித்த வில்லனாக தொடக்கத்திலேயே அறிமுகமாகிறார். தனது அப்பா ராஜ்கிரண் இறந்ததும் சொந்த ஊருக்கு செல்லும் தனுஷ் தனது திருமணத்தை நிறுத்திவிடுகிறார். அப்பாவின் கடையை அவரே எடுத்து நடத்த முடிவு செய்கிறார். நித்யா மேனன் அவருக்கு உதவியாக நிற்கிறார் தங்கையை ஏமாற்றியதற்காக அவரை பழிவாங்க தனுஷை தேடி வருகிறார் அருண் விஜய். இன்னொரு பக்கம் அந்த இட்லி கடையை ஆட்டையப்போட சமுத்திரகனி ஊருக்குல் வலம் வருகிறார். தனுஷ் தனது அப்பாவின் இட்லி கடையை காப்பாற்றினாரா. அருண் விஜய் அவரை பழிவாங்கினாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

இட்லி கடை விமர்சனம்

ஒரு சின்ன இட்லி கடையை வைத்து தனுஷ் நல்ல படம் எடுக்க நினைத்ததில் தவறேதும் இல்லை. ஆனால் நல்ல எண்ணத்திற்காக பாராட்டப்பட வேண்டும் என்றால் இங்கு வெளியாகும் எல்லா படங்களும் சூப்பர் படங்களே. இந்த மாதிரியான எளிய உணர்ச்சிகரமான கதைகள் எதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதும் மிக அவசியம். அதே நேரத்தில் பெரிய ஆடமரம் இல்லாத கதையில் திரைக்கதையும் கதாபாத்திர உருவாக்கவும் கொஞ்சமாவது தனித்துவமாக இருக்க வேண்டும் . அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கமான டெம்பிளேட்களை வைத்து ஒரு சராசரியான படமாக உருவாகியிருக்கிறது இட்லி கடை. சொந்த ஊர் பெருமை , ஊர் செண்டிமெண்ட் , அப்பா செண்டிமெண்ட் , இயற்கை செண்டிமெண்ட் என படத்தில் எல்லாமே செண்டிமெண்ட் தான். விட்டால் தனுஷ் சினிமாவை விட்டு கிராமத்திற்கே போய் செட்டில் ஆகி விடுவாரோ என்கிற பயம் ரசிகர்களுக்கு ஏற்படக்கூடும்.

சொந்த ஊருக்கு திரும்பி செல்வதையும் , சொந்த ஊர் மக்களை கொண்டாடுவதும் எல்லாம் சரி தான் . ஆனால் இந்த பகட்டான படங்களில் வரும் ஊர்கள் மற்றும் எப்படி சாதி மத பாகுபாடு இல்லாமல் எப்போதும் சமத்துவத்துடன் வாழ்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. அடுத்தடுத்து யூகிக்கக் கூடிய காட்சிகள் , யூகிக்கக் கூடிய க்ளைமேக்ஸ் என ஒட்டுமொத்தமாக கிரிஞ்சு ப்ரோ மேக்ஸ் படம் இட்லி கடை. ராஜ்கிரண் வரும் காட்சிகளும் அவரது நடிப்பு தவமாய் தவமிருந்து காலத்திற்கு கூட்டிச் செல்கின்றன. இளவரசு கதாபாத்திரம் நல்ல ஆறுதல் . வில்லனாக வரும் அருண் விஜய் சிறப்பாக நடித்திருந்தாலும் காக்கா ஆயிருந்ததற்கு எல்லாம் கொலை செய்யப் போகிறார். நித்யா மேனன் கொஞ்சம் ரூட்டை மாற்றலாம். ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் மட்டுமே பார்த்து போர் அடிக்குது. ஷாலினி பாண்டேவுக்கு க்யூட்டான கேமியோ . கதையில் விண்டேஜ் ஃபீல் வருகிறதோ இல்லையோ கிரண் கெளசிக்கின் ஒளிப்பதிவு நம்மை அப்படியே அந்த காலத்திற்கு கூட்டிச் செல்கிறது. குறிப்பாக ராஜ்கிரணின் ஃபிளாஷ்பாக் காட்சிகள் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தரம்.

தனுஷின் இட்லி கடை , கடையும் , அலங்காரமும் தான் புதுசு மற்றபடி அதே புளித்துப்போன கமர்சியல் இட்லியை தான் சுட்டு வைத்திருக்கிறார்கள்.