வங்கிகளில் உள்ள உதவி அலுவலர் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (Institute of Banking Personnel Selection) வெளியிட்டுள்ளது. இதற்கு இன்று (07.06.2024) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்

அதிகாரி - குரூப் “A” Officers (Scale-I, II & III)

உதவி அலுவலர் ( Group “B”)

தமிழ்நாடு - வங்கிகளில் உள்ள மொத்த பணியிடங்கள்

இதற்கு தேசிய அளவிலான பொதுத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மொத்த பணியிடங்கள் - 9,995

’COMMON RECRUITMENT PROCESS’-ல் பங்கேற்கும் வங்கிகள்:

பேங்க் ஆஃப் பரோடா

கனரா வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

யு.சி.ஓ. வங்கி

பேங்க் ஆஃப் இந்தியா

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

பஞ்சாப் நேசனல் வங்கி

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா

இந்தியன் வங்கி

பஞ்சாப் & சிந்து வங்கி

பணியிட விவரம்

ஆந்திர பிரதேசம், அந்தமான மற்றும் நிகோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், அசாம்,பிகார்,
சண்டிகர்,சட்டிஸ்கர், டெல்லி,கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம்,ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட்,கர்நாடகா,கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, லடாக், லட்சத்தீவுகள், மத்திய பிரதேசம்,மாஹாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா,மிசோரம்,நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான்,சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட்,மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மேலே குறிப்பிட்ட வங்கிகளில் எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்து அறிவிப்பில், “ANNEXURE I VACANCIES UNDER CRP-CLERKS-XIII' என்ற பகுதியில் விரிவான விவரங்களை காணலாம்.

கல்வித் தகுதி:

21.07.2023-ன் படி, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

உள்ளூர் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு தகுதியானவர்கள் முதல் நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்ப கட்டணம்:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் கட்டணமாக ரூ.850, பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், PwBD/EXSM ஆகியோர் ரூ.175 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வு பாடத்திட்டம்

முதலன்மை தேர்வு பாடத்திட்டம்:

எப்படி விண்ணப்பிப்பது?

https://ibpsonline.ibps.in/crpcl13jun23/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் அப்டேட்களை காணவும்.

முக்கிய நாட்கள்:

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/Final-Notification_-CRP-CLERKS-XIII_updated_3.7.23.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.

இது தொடர்பான அறிவிப்புகளை https://www.ibps.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.07.2024