Hyundai Bayon SUV: தென்கொரிய நிறுவனமான ஹுண்டாயின் பேயோன் எஸ்யுவிக்கு, இந்தியாவில் முன்பதிவு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹுண்டாய் பேயோன் எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது புதிய எஸ்யுவி ஆன பேயோன் மாடலை விழாக்காலத்தை முன்னிட்டு, அக்டோபர் மாத வாக்கில் சந்தைப்படுத்த உள்ளதாக தென்கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம் வரும் அக்டோபர் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ள பாரிஸ் மோட்டார் ஷோ மூலம் இந்த எஸ்யுவி ஆனது சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனிடையே, உள்ளூரில் இந்த காருக்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள நபர்கள் 11 ஆயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்தி, ஹுண்டாயின் விற்பனை நிலையங்கள் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலான முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஹுண்டாய் பேயோன் - டிசைன் விவரங்கள்:

பேயோன் மாடலானது 4.2 மீட்டர் நீளத்துடன் உள்ளூர் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் மிகவும் சிறிய காராக இருக்கும் என்பதையும் ஹுண்டாய் உறுதி செய்துள்ளது. இதனால் 4.3 மீட்டர் நீளம் கொண்டுள்ள மாருதி சுசூகியின் விக்டோரிஸ் கார் மாடலுடன் இந்திய சந்தையில் நேரடியாக போட்டியிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் தென்கொரிய நிறுவனத்தின் புதிய எஸ்யுவி ஆனது, ஸ்கோடா குஷக் மற்றும் ஃபோக்ஸ்வாகனின் டைகனை விட அளவில் சிறியதாகும்.

இதுபோக இந்த பிரிவில் மிகவும் மலிவான கார் மாடலாகவும் இந்த புத்தம் புதிய எஸ்யுவி இருக்குமாம். ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் சப்-4 மீட்டர் வென்யு மற்றும் அடுத்த தலைமுறை க்ரேட்டாவிற்கு இடையே நிலைநிறுத்தப்பட உள்ளது. ப்ராண்டின் பெஸ்ட் காரான க்ரேட்டா அளவீடுகள் அடிப்படையில் அப்க்ரேட் செய்யப்பட்டு சுமார் 4.5 மீட்டர் நீளத்தை பெறக்கூடுமாம். அதேநேரம் தனித்துவமான க்ராஸ்-ஒவர் எஸ்யுவி தோற்றத்தை விரும்பும் நகர பயணாளிகளை பேயோன் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறதாம். இதற்காக விசாலமான இடவசதியும் உள்ளதாம்.

புதிய பேயோனின் முக்கிய அம்சங்கள்

12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட்

12.3 இன்ச் ட்ரைவர் டிஸ்பிளே

ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல்

எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்டபள் ட்ரைவர் சீட்

வெண்டிலேடட் முன்புற இருக்கைகள்

4 டாட் மோடிஃப் உடன் கூடிய மல்டி ஃபங்க்சனல் ஸ்டியரிங் வீல்

6 ஏர் பேக்குகள்

எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்

ட்ராக்‌ஷன் கன்ட்ரோல்

லெவல் 2 ADAS

பனோரமிக் சன்ரூஃப்

லெதரேட் இருக்கைகள்

வயர்லெஸ் சார்ஜிங்

ஆம்பியண்ட் லைட்டிங்

பேயோனின் பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் - 22KM மைலேஜ்

ஹுண்டாயின் க்ரேட்டா, வெர்னா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய மாடல்களில் இடம்பெற்றுள்ள அதே, 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் தான் பேயோனிலும் இடம்பெற உள்ளது. இது 114bhp மற்றும் 144Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் அல்லது CVT ஆட்டோமேடிக் யூனிட் வழங்க வாய்ப்புள்ளதாம். மேலும், இதில் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட்டானது வழங்கப்பட உள்ளதாம். பாடி கட்டமைப்புக்கு கீழே பொருத்தப்பட்டு இருக்கும் என்பதால் பூட் ஸ்பேஸ் தாராளமாக இருக்குமாம். அதோடு, 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தை கொண்டுள்ள ஹுண்டாய் கார்களில் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட்டை கொண்ட முதல் மாடலாகவும் இருக்கும். பெட்ரோல் எடிஷன் லிட்டருக்கு 17 முதல் 19 கிலோ மீட்டர் வரையிலும், சிஎன்ஜி எடிஷன் 20 முதல் 22 கிலோ மீட்டர் வரையிலும் மைலேஜ் அளிக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Affordable Petrol Cars: 25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்

பேயோனின் எதிர்பார்க்கப்படும் விலை

பேயோனின் மிட்-சைஸ் எஸ்யுவி உள்ளூர் சந்தையில் ரூ.8 லட்சம் தொடங்கி ரூ.15 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரையிலான விலை வரம்பை பெறக்கூடுமாம். இதனால் ரூ.10.50 லட்சத்தில் தொடங்கி ரூ.19.99 லட்சம் வரையிலான விலை வரம்பில் கிடைக்கும் விக்டோரிஸிற்கு நேரடியாக சவால் அளிக்கிறது.