தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இடைவிடாது கனமழை பெய்துள்ள நிலையில், நகரின் பல பகுதிகளில் மழை நீரானது தேங்கியுள்ளது. சில பகுதிகளில் குளம் போல் மழை நீர் தேங்கியிருக்கிறது. இன்னும் சில இடங்களில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து முக்கிய சாலை ஒன்றில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர்,வேகமாக சென்ற மழை நீரில் கடந்து செல்ல முயற்சித்துள்ளார். நீரின் வேகம் அதிகமாக இருந்த நிலையில், அவர் மோட்டர் சைக்கிளுடன் பின்னோக்கி இழுத்து செல்லப்பட்டார். பின் உடனடியாக சாலையில் இருந்தவர்கள் ஓடி சென்று பத்திரமாக அவரை மீட்டனர். இதுதொடர்பான காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன