நான் சினிமாவில் அதிக முக்கியத்துவம் கொண்ட கேரக்டர்களிலேயே நடிக்க விரும்புவதாக நடிகை ஹனிரோஸ் தெரிவித்துள்ளார். மேலும் மலையாள சினிமாவுக்கு நான் தேவையில்லை என்ற நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

ரேச்சல் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா

மலையாள சினிமாவில் ஆனந்தினி பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ரேச்சல்’. இந்த படத்தில் பாபுராஜ், ராதிகா ராதாகிருஷ்ணன், சந்து சலீம்குமார், வினீத் தட்டில், ஜாபர் இடுக்கி, ரோஷன் பஷீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 2025, டிசம்பர் 6 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மலையாள இயக்குநர் வினயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஹனிரோஸ் தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, காந்தர்வன், மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதேசமயம் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ளார். பல்வேறு கடை திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வரும் ஹனி ரோஸ் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

கைவிட்ட மலையாள சினிமா

இந்த நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஹனி ரோஸ், ‘ சினிமா என்பது எனக்கு மிகப்பெரிய ஆர்வம் கொண்ட துறையாகும். நான் அதிக படங்களில் எல்லாம் நடிகக் விரும்பவில்லை. என்னை தேடி வருவதில் சிறந்ததை தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

மலையாள சினிமாவில் நான் அறிமுகமாகி கிட்டதட்ட 20 வருடங்களாகி விட்டது. ஆரம்பத்தில் என் கை பிடித்து இந்த சினிமா துறைக்குள் என்னை வழி நடத்தியவர்களான இயக்குநர்கள் வினயன், லால் ஜோஸ் ஆகியோரை இந்த தருணத்தில் நினைவுக் கூறுகிறேன். அன்ன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேசமயம் இப்போதைய சூழலில் மலையாள சினிமாவுக்கு நான் தேவையா என கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். உண்மையில் இந்த சினிமாவில் ஒட்டிக் கொண்டிருக்கிறேன் என கவலை தெரிவித்தார். மேலும் தான் நடித்துள்ள ரேச்சல் படத்தை ஒரு ஆசீர்வாதமாக உணர்கிறேம். ஒரு சில படங்கள் மிகப்பெரிய சக்தியை கொண்டுள்ளது. அப்படியான ஒரு உணர்வை இப்படம் கொடுத்தது எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் வினயன், மலையாள சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பல படங்களில் ஒப்பந்தமாகி சம்பாதிப்பதை விட ஹனிரோஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிகம் சம்பாதிக்கிறார். இதற்கு அவரின் ஆர்வமே காரணம் என அவர் கூறினார்.