இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன விற்பனை நிறுவனம் ஹோண்டா. ஏராளமான ஸ்கூட்டர், இரு சக்கர வாகனங்களை வெற்றிகரமாக தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றனர்.

Honda SP 125:

இந்த நிலையில், ஹோண்டாவின் வெற்றிகரமான இரு சக்கர வாகனமாக விற்பனையில் இருப்பது Honda SP 125. வசீகரமான மற்றும் கம்பீரமான தோற்றம் காரணமாக இந்த பைக் மீது பலருக்கும் ஈர்ப்பு உள்ளது. இந்த பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

Honda SP 125 பைக்கில் மொத்தம் 3 வேரியண்ட்கள் உள்ளது.

1. SP 125 Drum:

ஹோண்டாவின் SP 125 Drum பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 9 ஆயிரத்து 737. இதில் ட்ரம் ப்ரேக்ஸ் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 116 கிலோ ஆகும். இந்த பைக் நீலம், கருப்பு, கருநீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ணங்களில் உள்ளது.

2. SP 125 25-year Anniversary Edition:

ஹோண்டாவின் இந்த SP 125 25-year Anniversary Edition பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரத்து 423 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 117 கிலோ ஆகும். சாம்பல் மற்றும் நீல நிறங்களில் இந்த பைக் உள்ளது.

3. SP 125 Disc:

இந்த SP 125 Disc பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 13 ஆயிரத்து 757. இதில் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 117 கிலோ ஆகும். இந்த பைக் நீலம், கருப்பு, கருநீலம், சாம்பல் மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளது.

மைலேஜ்:

இந்த பைக்கில் 123.94 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 62 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இந்த பைக் 5 கியர்களைக் கொண்டது. 11 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது.

125 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த பைக் நல்ல மைலேஜ் தருவதால் வாடிக்கையாளர்கள் இதை விரும்பி வாங்குகின்றனர். 10.9 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

682 கிலோமீட்டர்:

முதல் கியரை கீழேவும், மற்ற கியர்களை மேலேவும் மாற்ற வேண்டும். ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 682 கிலோமீட்டர் வரை செல்லலாம். சிபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. முன்பக்கம் 18 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 18 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது.

ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் சஸ்பென்சன் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. 42 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.