Holiday Special Bus : 4 நாள் தொடர் விடுமுறை.! வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குஷி- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு

3 weeks ago 5
ARTICLE AD

தொடர் விடுமுறை - சிறப்பு பேருந்து

விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அந்த வகையில் தொடர் விடுமுறை கிடைத்தால் உறவினர்கள் வீட்டிற்கு செல்லவோ, சுற்றுலா செல்லவோ திட்டமிடுவார்கள். அந்த வகையில் தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனையடுத்து சிறப்பு பேருந்து தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இன்று (18/3/2026 புதன் கிழமை) நாளை (19/03/2026 வியாழக்கிழமை தெலுங்கு வருட பிறப்பு) 20/03/2026 (வெள்ளிக் கிழமை) 21/03/2028 (சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை), 22/03/2026 (ஞாயிற்றுக் கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு 18/03/2026, 19/03/2026 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 18/03/2026 (புதன் கிழமை) அன்று 450 பேருந்துகளும் 19/03/2026 (வியாழக் கிழமை) 345 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு18/03/2026 (புதன் கிழமை) அன்று 100 பேருந்துகளும் 19/03/2026 (வியாழக் கிழமை)) 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 18/03/2026 மற்றும் 19/03/2026 ஆகிய நாட்களுக்கு 24 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 22/03/2026 (ஞாயிறு) அன்று 565 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில்,புதன் கிழமை அன்று 22,768 பயணிகளும், வியாழக்கிழமை அன்று 6,034 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 8,575 பயணிகளும் சனிக்கிழமை அன்று 4,139 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 19,888 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article