தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்பது மறக்க முடியாத ஒன்றாகும். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட சில செயல்பாடுகள் காரணமாக இந்தி மொழி திணிக்கப்படுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்தி மொழிக்கு தடையா?

இந்தி மொழி திணிப்பிற்கு பாஜக தவிர தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் சட்டப்பேரவைக் கூட்டதொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையத்தில் பரவும் இந்த தகவலால் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது.

உண்மை என்ன?

இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி ! தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் வதந்தியே.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி !

தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது.

இது…

— TN Fact Check (@tn_factcheck) October 15, 2025

"அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை " என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார். வதந்தியைப் பரப்பாதீர்!

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்தி மொழி திணிப்பு:

இந்தியாவைப் பொறுத்தவரை ஜனநாயக அமைப்பைக் கொண்ட இந்த நாட்டில் எந்தவொரு மொழிக்கும் தடை விதிக்க இயலாது. பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் செயலாகவும், அரசியலமைப்பிற்கு எதிரானதாகவும் அது கருதப்படும்.

திமுக அரசு இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு எதிராகவே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதை திமுக தலைவர்கள் மட்டுமின்றி பிற அரசியல் கட்சித் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், மத்திய பாஜக அரசின் ஆட்சியில் நாட்டில் உள்ள மொழிகளில் சமஸ்கிருதம் மற்றும் இந்திக்கு மட்டுமே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

மற்ற மொழிகளுக்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக, தென்னிந்திய மொழிகளுக்கு போதியளவு நிதி ஒதுக்கப்படாமலே உள்ளது. மத்திய அரசின் இந்த பாரபட்சத்திற்கு தென்னிந்திய மொழி ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.