நடுத்தர வர்க்க மக்கள், தங்களின் பெட்ரோல் செலவுகளைக் குறைப்பதற்காக மின்சார ஸ்கூட்டர்களை நாடி வருகின்றனர். இந்தச் சூழலில், ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா மற்றும் விடா VX2 கோ ஆகிய ஸ்கூட்டரில் சிறந்தது எது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா vs விடா VX2 கோ

ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா, இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஒரு பழம்பெரும் மாடலாகும். இதன் எளிமையான வடிவமைப்பு, நம்பகமான செயல்திறன் மற்றும் கட்டுப்படியான விலை ஆகியவை இதன் முக்கிய பலங்களாகும். இதன் எடை வெறும் 93 கிலோ என்பதால், போக்குவரத்து நெரிசலில் இதை எளிதாகக் கையாள முடியும்.

விடா VX2 கோ என்பது ஹீரோ நிறுவனத்தின் ஒரு பிரீமியம் பிராண்ட் ஆகும். இது தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் வேகத்தை விரும்பும் இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள PMSM மோட்டார் மற்றும் கழற்றி மாட்டக்கூடிய பேட்டரி தொழில்நுட்பம் இதைத் தனித்துவமானதாக ஆக்குகிறது.

விலையில் உள்ள வேறுபாடு

விலையைப் பொறுத்தவரை, ஹீரோ ஆப்டிமாவின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 83 ஆயிரமாகவும், விடா VX2 கோவின் விலை ரூ. 99 ஆயிரமாகவும் உள்ளது. இது சுமார் ரூ. 16 ஆயிரம் வித்தியாசமாகும்.

ஆப்டிமாவில் 1.2kW BLDC மோட்டார் இருக்கும் நிலையில், விடாவில் சக்திவாய்ந்த 6kW PMSM மோட்டார் உள்ளது. இது மலைப்பாங்கான பகுதிகளில் அல்லது இருவர் பயணிக்கும்போது சிறந்த சக்தியை வழங்குகிறது. ஆப்டிமாவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 4 கி.மீ மட்டுமே. ஆனால், விடா VX2 கோ மணிக்கு 70 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. விடாவில் புளூடூத் இணைப்பு, நேவிகேஷன், ஸ்மார்ட்போன் வழியாக அழைப்பு/எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள் போன்ற அம்சங்கள் உள்ளன. இவை ஆப்டிமாவில் கிடைக்காது.

இரண்டுத்துக்கும் உள்ள வித்தியாசம்

சுவாரஸ்யமாக, இரண்டின் ரேஞ்சும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது. ஆப்டிமா 83 கிலோமீட்டர் ரேஞ்ச்சை வழங்கும் அதே வேளையில், விடா 92 கிலோமீட்டர் ரேஞ்ச்சை வரம்பை வழங்குகிறது. ஆனால், விடாவில் உள்ள கழற்றி மாட்டக்கூடிய பேட்டரி ஒரு திருப்புமுனையாகக் கூறப்படுகிறது. விடா VX2 கோ வெறும் 3.53 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிறது. மேலும், இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் (இரண்டு மணி நேரம்) வசதி இல்லை. ஆப்டிமா 4.5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. அதிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை.

அம்சம்

ஹீரோ ஆப்டிமா CX 2.0

விடா விஎக்ஸ்2 கோ

மோட்டார் சக்தி

1.2kW(BLDC)

6kW(PMSM)

அதிகபட்ச வேகம்

48 கிமீ/மணி

70 கிமீ/மணி

வரம்பு

ஒருமுறை சார்ஜ் செய்தால் 89 கி.மீ.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 92 கி.மீ.

சார்ஜ் நேரம்

4.5 மணிநேரம்

3.53 மணிநேரம்

எடை

93 கிலோ

106 கிலோ

இருக்கைக்கு அடியில் சேமிப்பு

இருக்கிறது

33.2L

சரிவுத்திறன் (உயரமான இடங்களில் ஏறும் திறன்)

7 டிகிரி

15 டிகிரி

தினசரி வேலைகளுக்கும், குழந்தைகளை பள்ளியில் விடுவதற்கும், ஐந்து முதல் பத்து கிலோமீட்டர் பயணத்திற்கு ஹீரோ ஆப்டிமா போதுமானது. உங்கள் அலுவலகம் சற்று தொலைவில் இருந்து, போக்குவரத்து நெரிசலை விரைவாகக் கடந்து செல்ல விரும்பினால், விடா VX2 கோ சிறந்த தேர்வாகும்.