தமிழகத்துக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 30 ரன்கள் எடுத்து அசத்தினார்.

விஜய் சங்கரின் அதிரடி:

இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் தமிழக அணி முதலில் பேட்டிங் செய்தது. தமிழக வீரர் ஜெகதீசன் அரை சதம் அடித்து நல்ல தொடக்கம் தந்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களும் சிறப்பாக விளையாடி அதிரடியாக ரன்களை சேர்த்தனர். இறுதிக்கட்ட ஓவர்களில் விஜய் சங்கர் மற்றும் ஷாருக்கானின் அதிரடியால் தமிழக அணி இருபது ஒவர்கள் முடிவில் 221 ரன்கள் குவித்தது. குறிப்பாக தமிழக வீரர் விஜய் சங்கர் பாண்டியாவின் ஓரே ஒவரில் 3 சிக்சர் அடித்து அசத்தினார். 222 ரன்கள் என்கிற கடினமான இலக்குடன் களம் இறங்கியது பரோடா அணி.

இதையும் படிங்க: Vijay Shankar Watch Video : அடி மேல் அடி.. சிக்கிய பாண்டியா! நொறுக்கி தள்ளிய விஜய் சங்கர்

திருப்பம் தந்த பாண்டியா:

கடினமான இலக்குடன் களம் இறங்கிய பரோடா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இந்த நிலையில் கடைசி நான்கு ஓவரில் பரோடா அணிக்கு 66 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தார். ஐபிஎல் ஏழத்தில் சிஎஸ்கே அணியால் 2.20 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழக வீரரான குர்ஜப்னீத் சிங்17வது வரை வீச வந்தார்.

அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்து அசத்தினார். அந்த ஓவரில் மொத்தம் நான்கு சிக்ஸர் ஒரு பவுண்டரி என 30 ரன்கள் அடித்து போட்டியை பரோடா பக்கம் திருப்பினார் ஹர்திக் பாண்டியா.

6⃣,6⃣,6⃣,6⃣,4⃣

One goes out of the park 💥

Power & Panache: Hardik Pandya is setting the stage on fire in Indore 🔥🔥

Can he win it for Baroda?

Scorecard ▶️ https://t.co/DDt2Ar20h9#SMAT | @IDFCFIRSTBank pic.twitter.com/Bj6HCgJIHv

— BCCI Domestic (@BCCIdomestic) November 27, 2024

த்ரில் வெற்றி:

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். போட்டியின் இறுதிப்பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பரோடா வீரர் அதித் சேத் பவுண்டரி அடித்து பரோடா அணிக்கு த்ரில் வெற்றியை தேடிக் கொடுத்தார்.இந்த வெற்றியின் மூலம் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சேசிங் செய்யப்பட்ட இலக்காக இது அமைந்தது.