பியாண்ட் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹேப்பி ராஜ். ஜிவி பிரகாஷ் , கெளரி ப்ரியா , அபாஸ் , ஜார்ஜ் மரியான் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள் . ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு பின் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள பக்கா ஃபேமிலி என்டர்டெயினர் படமாக ஹேப்பி ராஜ் படம் உருவாகியுள்ளதாக விமர்சகர்கள் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

ஹேப்பி ராஜ் திரைப்பட விமர்சனம்

தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும் ஜிவி பிரகாஷ் ஹிட் கொடுத்து நீண்ட காலம் ஆகிறது. அந்த குறையை போக்கி வைக்கும் விதமாக ஹேப்பி ராஜ் படம் இருக்கும் என படம் பார்த்த பலர் கூறி வருகிறார்கள். முதல் பாதி இளைஞர்களை கவரும் விதமாக காமெடியாக சென்றாலும் இரண்டாம் பாதியில் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.

#HappyRaj 5/5 ❤️🙏 தமிழ் சினிமாவின் தங்கம் இது யாரு மிஸ் பண்ணிடாதீங்க ❤️👌@gvprakash reloaded 😍🔥 TIN வைப் & 2nd half முழுக்க வேற ஒரு GVயை பாப்பீங்க அப்படி ஒரு நடிப்பு ❤️❤️❤️

1st half முழுக்க பசங்களோட Fun பண்ணலாம் கைதட்டி சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சி 😂👌 அப்படியே 2nd Half… pic.twitter.com/EWYkYeTUlS

— RamKumarr (@ramk8059) March 24, 2026

11 வருடங்களுக்குப் பின் அபாஸ் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பியுள்ளார். அவருக்கு சிறப்பான கம்பேக் படமாக இப்படமும் அவரது கதாபாத்திரமும் அமைந்துள்ளது . ஜிவி பிரகாஷின் அப்பாவாக நடித்துள்ள ஜார்ஜ் மரியானின் நடிப்பு ரசிகர்களால் அதிகம் பாராட்டப்படுகிறது. கைதி , டிராகன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கிய ஜார்ஜ் மரியானுக்கு ஹேப்பி ராஜ் படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என்றும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்

#HappyRaj ..Happened to see a special screening. A beautiful commercial family tale which touched so deeply in the second half. Director maria you did it man. @gvprakash rocked as happy & George mariyan + Abbas rocked.#blockbusterloading.

— Flim Updates⚕️ (@Dasarathan_1720) March 24, 2026