H. Raja: அண்ணாமலை போனார்..வந்தார் எச். ராஜா! நிழல் தலைவர் - தமிழக பாஜகவில் நிகழ்ந்த மாற்றம்

1 year ago 7
ARTICLE AD
லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்துப் படிப்பதற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்றுள்ளார். நான்கு மாதம் லண்டனில் தங்கிப் படித்து முடித்துவிட்டு அவர் டிசம்பர் மாத இறுதியில் இந்தியா திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்பும் வரை கட்சி பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எச். ராஜா தலைமையிலான இந்த குழுவில், பாஜக மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், ராம சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Read Entire Article