<p>தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. இயங்கி வருகிறது. இவர்கள் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றனர்,</p>
<p>இந்த நிலையில், நடப்பாண்டிற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, குரூப் 4 தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.</p>
<p>இந்த குரூப் 4 தேர்வு முறையில் புதியதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து அதை அடித்துவிட்டு, பிறகு வேறு ஒரு பதிலை தேர்வு செய்து அதை பதிவிட்டாலும் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட்( மதிப்பெற்றதாக) கருதப்படும். இந்த முறை நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>தேர்வு தொடங்கும் முன்பு தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>