குரூப் 4 கலந்தாய்வு எந்த வரிசையில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (Tamil Nadu Public Service Commission) கூறி உள்ளதாவது:

''ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு 4-ன் பல்வேறு பதவிகளுக்கான கலந்தாய்வு எந்த வரிசையாக நடைபெறும்‌?

பல்வேறு பதவிகளுக்கான கலந்தாய்வு கீழ்க்கண்ட வரிசையில்‌ நடைபெறும்‌.

1. இளநிலை உதவியாளர்‌ மற்றும்‌ கிராம நிர்வாக அலுவலர்‌

2. தட்டச்சர்‌

3. சுருக்கெழுத்து தட்டச்சர்‌

உடற்தகுதித்‌ தேர்வு மற்றும்‌ நடைச் சோதனை

4. வனக்காப்பாளர்‌ மற்றும்‌ ஓட்டுநர்‌ உரிமத்துடன்‌ கூடிய வனக்காப்பாளர்‌

5. வனக்காவலர்‌ மற்றும்‌ வனக்காவலர்‌ (பழங்குடியின இளைஞர்‌)''

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.