பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இதன் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு முன்னணி நிறுவனங்களும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது.

ஹைப்ரிட் கார்:

அதேசமயம், சில நிறுவனங்கள் பெட்ரோலிலும் ஓடும் வகையிலும், பேட்டரியிலும் இயங்கும் வகையிலும் கார்களைத் தயாரித்து வருகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹைப்ரிட் கார் Maruti Grand Vitara.

விலை:

இந்த காருக்கு என்று சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட்டில் இயங்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 35 வேரியண்ட்கள் உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.41 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 24.48 லட்சம் ஆகும்.

இந்த கார் 102 பிஎச்பி குதிரைத் திறன், 139 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 21.11 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.

Grand Vitara Sigma
Grand Vitara Delta
Grand Vitara Zeta
Grand Vitara Zeta (O)
Grand Vitara Zeta (O)
Grand Vitara Alpha (O)
Grand Vitara Delta Plus
Grand Vitara Zeta Plus
Grand Vitara Zeta Plus (O)
Grand Vitara Alpha Plus
Grand Vitara Phantom Blaq Edition
Grand Vitara Alpha Plus (O)

ஆகிய வேரியண்ட்கள் இந்த காரில் உள்ளது.

ஹைப்ரிட் வேரியண்ட்கள்:

இந்த கார் 1.5 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டது. 1462 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்ட கார் இதுவாகும். இதன் ஹைப்ரிட் கார் வேரியண்டில் 1490 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Grand Vitara Delta Plus (ரூபாய் 20.61 லட்சம்), Grand Vitara Zeta Plus (ரூபாய் 22.19 லட்சம் முதல் ரூபாய் 22.45 லட்சம் வரை), Grand Vitara Zeta Plus (O) (ரூபாய் 22.91 லட்சம் முதல் ரூபாய் 23.17 லட்சம் வரை), Grand Vitara Alpha Plus (ரூபாய் 24.13 லட்சம் முதல் ரூபாய் 24.39 லட்சம் வரை), Grand Vitara Alpha Plus (O) ( ரூபாய் 24.22 லட்சம் முதல் ரூபாய் 24.48 லட்சம் வரை) வேரியண்ட்கள் அனைத்தும் ஹைப்ரிட் கார்கள் ஆகும். இவை அனைத்தும் 27 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இவை அனைத்தும் ஆட்டோமெட்டிக் கார்கள் ஆகும். இதன் உட்கட்டமைப்பும், வசீகர தோற்றமும் வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

வசதிகள்:

இதில் 360 டிகிரி கேமரா, எல்இடி விளக்குகள், கனெக்டட் கார் டெக்னாலஜி வசதிகள் உள்ளது. 8 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் வித் இபிடி, ஸ்டெபிளிட்டி ப்ரோக்ரம் வசதிகள் உள்ளது. இந்த கார் நீலம், வெள்ளை, சாம்பல் உள்பட 10 வண்ணங்களில் உள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமாக மாருதி சுசுகி திகழ்வதால் இவர்களின் கார்களுக்கு என்று தனி வரவேற்பு வாடிக்கையாளர்களிடம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவிலே அதிகளவு விற்பனையானது மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் ஆகும். அதில் இந்த கிராண்ட் விதாரா காரின் பங்களிப்பு மிக அதிகம் ஆகும்.