<p>உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துபவர்களிடம் பெரும்பாலும் இணையதள பயன்பாடு உள்ளது. இணையதள வளர்ச்சி மூலமாக செல்போன் பயன்பாடு பெற்ற பிறகு உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வதில் கூகுளின் பயன்பாடு இன்றியமையாதது.</p>
<p>உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை மக்கள் தெரிந்து கொள்ள கூகுள் செய்திகளை வழங்கி வருகிறது. கூகுள் டிஸ்கவரும் இதற்காக பயன்படுகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கூகுள் செய்திகள், கூகுள் டிஸ்கவர் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதனால், மக்களுக்கு செய்திகளை அறிந்து கொள்வதில் பெரும் பின்னடைவும், சிரமும் ஏற்பட்டுள்ளது. இணைய சேவை குறைபாடு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குறைபாட்டை விரைந்து நீக்கும் பணிகளில் கூகுள் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.</p>