<h2>குட் பேட் அக்லி</h2>
<p>அஜித் குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவிஶ்ரீ பிரசாத் இசையமைக்க இருந்தார். தற்போது டி.எஸ்.பி இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இப்படத்தின் புது இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p>