Gold Silver Rates Today: வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்.! தங்கத்தின் விலை சரசரவென சரிந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?

1 week ago 3
ARTICLE AD

தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது தினந்தோறும் புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பானது எனவும், எதிர்கால சேமிப்பிற்கு தங்கம் ஒரு அட்ஷய பாத்திரம் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். மேலும் டாலருக்கு நிகராக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவு வாங்குவதால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

ஈரான்- அமெரிக்கா போர்

மேலும் தற்போது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கம் விலையானது கடந்த 20 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்கி குவிக்க தொடங்கினர். ஆனால் அடுத்த சில நாட்களில் அமெரிக்கா அதிகர் ட்ரம்பின் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பால் மீண்டும் தங்கம் விலையானது அதிகரிக்க தொடங்கியது. அந்த வகையில் தங்கத்தின் விலை ஏறி இறங்கு வருவதால் தங்கத்தை வாங்கலாமா.? வேண்டாமா.? என நகைப்பிரியர்கள் தவித்து வருகிறார்கள்.

ஏறி இறங்கும் தங்கம் விலை

ஏப்ரல் 2-ம் தேதி - ஒரே நாளில் 2,400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,10,000 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் 300 ரூபாய் குறைந்து, கிராம் 13,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஏப்ரல் 3-ம் தேதி -  தங்கத்தின் விலை உயர்ந்தது. சவனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,10,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 100 ரூபாய் விலை உயர்நது, கிராம் 13,850 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஏப்ரல் 4ஆம் தேதி- சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், கிராமிற்கு 100 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஏப்ரல் 5ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் குறைந்து 13,810 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து 1,10,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையானது எந்த வித மாற்றமும் இன்றி கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article