<p>தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்கம் ஒரே நாளில் அதிரடியாக இரண்டு முறை மாற்றம் கண்டுள்ளது. அதன்படி இன்று (நவம்பர் 13) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்தது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.800 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ரூ.95,200க்கும், ஒரு கிராம் ரூ.11,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் நடுத்தர மக்களை மிகவும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இந்த தகவல் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. <br /><br /></p>
<p>(மேலும் தகவல்கள் அப்டேட் செய்யப்படுகிறது)</p>