ஏறி இறங்கும் தங்கம் விலை

ஆகஸ்ட் 25-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 15,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1,20.080 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 26-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை.

ஆகஸ்ட் 27-ம் தேதி கிராமிற்கு 285 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,725 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,17,800 ரூபாய்க்கும் விற்பனை.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் அதிகரித்தது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் அதிகரித்து 14,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 1200 ரூபாய் உயர்ந்து 1,18,400 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம், வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது ஏறி இறங்கும் நிலையில், இன்று கிராம் ஒன்றுக்கு 295 ரூபாய் குறைந்து 14,505 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,360 குறைந்து 1,16,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.