ஏறி இறங்கும் வரை தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு எப்போதும் குறையாது. எனவே மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் தங்கத்தை அதிகளவு வாங்கி வருகிறார்கள். குறிப்பாக திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் முக்கிய பங்கானது வகித்து வருகிறது. எனவே தங்களது குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்காக தங்கத்தை வாங்கி வருகிறார்கள். என்ன தங்கம் அதிகளவு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

தங்கம் விலை நிலவரம்

பிப்ரவரி 1-ஆம் தேதி தங்கம் விலை உயர்ந்தது. கிராமிற்கு 225 ரூபாய் அதிகரித்து, கிராம் 15,775 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்து சவரன் 1,26,200 ரூபாய்க்கும் விற்பனை

பிப்ரவரி 2 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 115 ரூபாய் குறைந்து 15.660 க்கு விற்பனை. சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து 1,25,280 ரூபாய்க்கு விற்பனையானது

பிப்ரவரி 3ஆம் தேதி காலையில் மாலையிலும் தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு 195 ரூபாய் குறைந்து 15,465 ரூபாய்க்கும், சவரனுக்கு 1560 ரூபாய் குறைந்து 1,23,720 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் வெள்ளி விலை

இந்த நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களாக 2480 ரூபாய் குறைந்த நிலையில் இன்று மேலும் 2160 ரூபாய் குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 265 ரூபாய் குறைந்து 15,200 ரூபாயும், சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1,21,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில் இன்று மட்டும் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 295 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்து 2லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.