தங்கம் விலை நிலவரம்

18-ம் தேதி தங்கம் ஒரு கிராம் தங்கம் 14,360 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,880 ரூபாயாகவும் விற்பனை.
19-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை
20-ம் தேதி கிராம் ஒன்று 14,300 ரூபாய்க்கும், சவரன் 1,14,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
21-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை
22-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 14,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,14,000 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நேற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில், இன்றும் குறைந்தும் நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து 14,160 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 1,13,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.