Gold and silver rate today : அப்பாடா.! இப்பவாவது குறைய மனசு வந்துச்சு.. குறைந்தது தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?

2 months ago 8
ARTICLE AD

தினந்தோறும் அதிகரிக்கும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான ஆர்வம் மற்ற நாடுகளை விட இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விஷேச நாட்கள், பண்டிகை தினங்களில் அதிகளவு தங்கத்தை வாங்குவார்கள். இந்த நிலையில் தான் தங்க நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக தாறுமாறாக ஏறி வருகிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

புதிய புதிய உச்சத்தை தொடும் தங்கம்

ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு சவரன் புதிய உச்சமாக 1.34 லட்சத்தை எட்டியது. இதனால் தங்களது பெண் பிள்ளைகளின் திருமண சேமிப்பாக சிறுக, சிறுக தங்கம் வாங்கியவர்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த விலை உயர்விற்கு பலவேறு காரணங்கள் கூறப்படுகிறது. தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தை அதிகளவு பல நாடுகள் வாங்கி குவிப்பதும், ஈரான், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதட்டமும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கடந்த மாதம் இறுதியில் தங்கத்தின் விலையானது யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் சவரனுக்கு 16ஆயிரம் ரூபாய் உயர்ந்தது. ஆனால் அடுத்த 3 நாட்களில் தங்கத்தின் விலையானது சரசரவென 22ஆயிரம் ரூபாய் அளவிற்கு குறைந்தது. தற்போது ஒரு நாள் தங்கத்தின் விலை அதிகரித்தால், மறுநாள் குறைகிறது. இதேபோல தங்கத்தின் விலை அதிகரிப்பால் பெரும்பாலான மக்கள் வெள்ளியில் முதலீடு செய்து வருகிறார்கள். இதன் காரணமாக வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கம் விலை நிலவரம்

கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஒரு சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்து 1,14,560 ரூபாய்க்கு விற்பனையானது அடுத்த நாள் ஜனவரி 6ஆம் தேதி சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து 1,12,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநாளில் பிற்பகலில்  தங்கத்தின் விலை அதிகரித்தது. கிராம் ஒன்றுக்கு 130 ரூபாயும், சவரனுக்கு 1040 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் 1,14,000 ரூபாயை எட்டியது.

ஜனவரி 7ஆம் தேதி- தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 170 ரூபாய் உயர்ந்து  14,420 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து 1,15,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று வாரத்தின் முதல் நாள் மீண்டும் தங்கத்தின் விலை உயர்வை சந்தித்தது. கிராம் ஒன்றுக்கு 230 ரூபாய் உயர்ந்து 14ஆயிரத்து 650 ரூபாய்கும், ஒரு சவரனுக்கு 1,840 ரூபாய் அதிகரித்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 14,580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,16 ,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று தங்கத்தின் விலையைப்போல் வெள்ளியின் விலையும் உயர்ந்தது. கிராம் ஒன்று 15 ரூபாய் அதிரித்து 300 ரூபாக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாயை மீண்டும் எட்டியது. இன்று வெள்ளியின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article