Gaza Peace Board Trump India: காசா அமைதிக் குழுவில் இணைய விடும்பும் நாடுகள், ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை முன்தொகையாக செலுத்த வேண்டும் என ஒரு தகவல் பரவி வருகிறது.

ரூ.9,000 கோடி கட்டணுமா?

அமெரிக்கா தலைமையில் முன்மொழியப்பட்ட "காசாவில் அமைதி குழுவில்" இடம் பெற விரும்பும் நாடுகள், 1 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமை தாங்குவார் என்ற வரைவு சாசனத்தை மேற்கோள் காட்டி, குழுவில் உறுப்பினர்களாக இருக்க விரும்பும் நாடுகள் மிகப்பெரிய பிணைய தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டது. அதன்படி, ”ட்ரம்ப் தலைவராக பணியாற்றுவார், அதே நேரத்தில் ஒவ்வொரு உறுப்பு நாடும் சாசனம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் குழுவில் இருக்கும், இது தலைவரின் விருப்பப்படி புதுப்பிக்கப்படும்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை கொடுத்த விளக்கம்..

உறுப்பினராக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும் என்ற தகவலை, வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது. இது தவறான செய்தி மற்றும் அமைதிக் குழுவில் சேர குறைந்தபட்ச உறுப்பினர் கட்டணம் ஏதும் இல்லை என்று விளக்கமளித்துள்ளது. மேலும், "இது அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நர்பு நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை வழங்குகிறது" என்று வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான் ராய்ட்டர்ஸின் கேள்விக்ளுக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை நிதி தொடர்பான எந்தவொரு தகவலையும் உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.

இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்

பிணையத்தொகை சர்ச்சைக்கு மத்தியில், டெல்லி மற்றும் வாஷிங்டன் வரி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தாலும், அமெரிக்கா இந்தியாவை முன்மொழியப்பட்ட "காசா அமைதிக் குழுவில்" சேர முறையாக அழைத்துள்ளது. ட்ரம்ப் இந்த அழைப்பை நேரடியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளார். இந்த முயற்சியை காசாவில் போருக்குப் பிந்தைய நிர்வாகம் மற்றும் மறுவளர்ச்சிக்கான தனது தொலைநோக்குப் பார்வையின் ஒரு முக்கிய இலக்காக முன்வைத்துள்ளார்.

அமைதிக் குழுவின் பணிகள்..

மோதலுக்குப் பிறகு காசா எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பதையும், மறுகட்டமைப்பு முயற்சிகள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்பதையும் மேற்பார்வையிடுவதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் ஒரு கட்டமைக்கப்பட்ட குழுவில் முக்கிய சர்வதேச நட்பு நாடுகளை ஈடுபடுத்தும் வாஷிங்டனின் நோக்கத்தை இந்த நடவடிக்கை வெளிக்காட்டுகிறது.

வெள்ளை மாளிகையின் முந்தைய அறிக்கைகளின்படி, ட்ரம்ப் வாரியத்திற்குத் தலைமை தாங்குவார். இந்தத் திட்டத்தில் காசாவில் அன்றாட நிர்வாகத்திற்குப் பொறுப்பான ஒரு தொழில்நுட்ப பாலஸ்தீனிய குழுவும், பரந்த ஆலோசனைப் பங்கைக் கொண்ட இரண்டாவது நிர்வாகக் குழுவும் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.