Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?

1 year ago 7
ARTICLE AD

நாடு முழுவதும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்புகளை ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் வழங்குவதாக வெளியான அறிவிப்பு உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் இந்தியா முழுவதும் தொழில்நுட்பப் படிப்புகளை வழங்கும் கல்வி நிலையங்களைக் கட்டுப்படுத்தி வருகிறது. கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவி, அங்கீகாரம், புதுப்பிப்பு, கல்வித் தரம் ஆகியவற்றுக்கு ஏஐசிடிஇயே பொறுப்பு.

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பா?

அந்த வகையில் ஏஐசிடிஇ, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்திகளை ஏஐசிடிஇ மறுத்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ''தாங்கள் எந்த விதமான இலவச மடிக்கணினியையும் வழங்கவில்லை. அதுகுறித்த எந்த விதமான சுற்றறிக்கையோ, அறிவிப்பையோ, அதிகாரப்பூர்வ தகவலையோ வெளியிடவில்லை.

செய்தி முற்றிலும் போலியானது

இவ்வாறு வெளியான செய்தி முற்றிலும் போலியானது. அதற்கும் ஏஐசிடிஇக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பெற்றோர்களோ, மாணவர்களோ, நிறுவனங்களோ, பொது மக்களோ இதை நிச்சயம் நம்ப வேண்டாம்’’ என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

மாணவர்கள்  https://facilities.aicte-india.org/circular%20regarding%20Clarification%20on%20Fake%20News%20Regarding%20Free%20Laptop%20Distribution%20to%20Students.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஏஐசிடிஇ வெளியிட்ட சுற்றறிக்கையைக் காண முடியும்.

பல்வேறு விதமான உதவித் தொகைகள்

அதே நேரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு விதமான உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் அவற்றை https://aicte-india.org/schemes என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://aicte-india.org/

இதையும் வாசிக்கலாம்: AICTE Scholarship: கல்லூரி மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவிக்கொகை; அள்ளித்தரும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி?

Read Entire Article