Fortuner Rival SUV: ஃபார்ட்சுனரின் போட்டியாளராக JSW நிறுவனமானது ஜெட்டூர் T2 (Jetour T2) மாடலை அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாம்.

JSW ஜெட்டூர் T2 லாஞ்ச் எப்போது?

சீனாவின் முன்னணி ஏற்றுமதி நிறுவனமான செரி உடனான ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் தனிப்பட்ட கார் பிராண்டாக தனக்கான இடத்தை பிடிக்க JSW மோட்டார்ஸ் நிறுவன்ம தீவிரம் காட்டி வருகிறது. இந்த கூட்டு முயற்சியின் முதல் மாடலாக ஜெட்டூர் T2 காரை வரும் தீபாவளி சீசனில் (அக்டோபர் மாதம்) விற்பனைக்கு கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய எஸ்யுவியை மகாராஷ்டிரவின் சம்பாஜி நகரில் உள்ள தனது ஆலையில் அசெம்பிளி செய்ய JSW மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஜெட்டூர் T2 - விலை, போட்டியாளர்கள்:

JSW நிறுவனமானது உள்ளூர் சந்தையில் ஜெட்டூர் T2 கார் மாடலின் சர்வதேச எடிஷனான ப்ளக்-இன் ஹைப்ரிட் மாடலையே விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளதால் போட்டித்தன்மை மிக்கதாக, 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படலாம். இதனால் டொயோட்டா ஃபார்ட்சுனர், எம்ஜி மெஜஸ்டர் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய மாடல்களுடன் போட்டியிட உள்ளது. பிரதான போட்டியாளரான ஃபார்ட்சுனரின் விலை வரம்பு, ரூ.34.76 லட்சத்தில் தொடங்கி ரூ.50.46 லட்சம் வரை நீள்கிறது. இந்த பிரிவில் இடம்பெறும் மற்ற மாடல்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்க, ப்ளக் -இன் ஹைப்ரிட் எடிஷனில் கிடைக்கும் T2 அதிக மைலேஜ் திறனை கொண்டிருக்கும்.

ஜெட்டூர் T2 - மைலேஜ் எப்படி?

ஜெட்டூர் T2 மாடலில் 1.5-லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினுடன் 26.7kWh பேட்டரி பேக் இணைக்கப்பட்டுள்ளது. இதை ஒற்றை-மோட்டார் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் அல்லது இரட்டை-மோட்டார் ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷனிலோ பயனர்கள் தேர்வு செய்யலாம். இந்த பேட்டரி பேக், NEDC தரமதிப்பீட்டின்படி 139 கி.மீ. தூரம் வரை முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தரவுகளானது, இந்த ப்ளக் இன் ஹைப்ரிட் மின்சார எஸ்யுவி ஆனது 100 கி.மீ-க்கு 0.8-5.4 லிட்டர் என்ற ஒருங்கிணைந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. தோராயமாக முழு டேங்கிற்கு எரிபொருளை நிரப்பி பயணம் செய்த பிறகு, மின்சார பயன்பாட்டில் 125 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியுமாம். பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டிருக்கும்போதும், SUV ஆனது EV பயன்முறையில் இயங்கும்போதும் மட்டுமே அதிகபட்ச மைலேஜை அடைய முடியும்.

ஜெட்டூர் T2 - மைலேஜ் ஒப்பீடு

ஒப்பீட்டளவில், 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின்களைக் கொண்ட டொயோட்டா ஃபார்ட்சுனர், முறையே லிட்டருக்கு 10.3 கி.மீ மற்றும் லிட்டருக்கு 14.6 கி.மீ வரை மைலேஜ் தருவதாகக் கூறப்படுகிறது. ஸ்கோடா கோடியாக் லிட்டருக்கு 14.86 கி.மீ வழங்க, எம்ஜி மஜெஸ்டரின் அதிகாரப்பூர்வ மைலேஜ் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த எண்களின் அடிப்படையில், ஜெட்டூர் டி2 அதன் பிரிவில் மிகவும் எரிபொருள் சிக்கனமான வாகனமாக செயல்பட உள்ளது.

இதையும் படியுங்கள்: Honda Discounts: ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?

ஜெட்டூர் T2 - முக்கிய அம்சங்கள்

சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் எடிஷனைப் போலவே, இந்தியாவிற்கு வரவிருக்கும் ஜெட்டூர் T2 வாகனமும் பல மேம்பட்ட அம்சங்களை கொண்டு ப்ரீமியம் மாடலாக விளங்க உள்ளது. அதன்படி,

15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே

ஸ்போர்ட்டி ஸ்டீயரிங் வீல்

வயர்லெஸ் மொபைல் சார்ஜர்

பனோரமிக் சன்ரூஃப்

பின்புற ஏசி வென்ட்கள்

முன் இருக்கை பயணிகளுக்கான வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

டூயல் ஜோன் தானியங்கி காலநிலை கட்டுப்பாடு

12-ஸ்பீக்கர் சோனி சவுண்ட் சிஸ்டம்

ஆம்பியண்ட் லைட்கள்

மின்சார மற்றும் காற்றோட்ட வசதியுள்ள முன் இருக்கைகள்

ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல்

360 டிகிரி கேமரா

லெவல் 2 ADAS

எலெக்ட்ரிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள்

ஹில் ஹோல்ட் அசிஸ்ட்