Flipkart ல் அதிக தள்ளுபடியில் iPhone 15 விற்பனை; மேலும் மலிவாக பெறுவதற்கான டிப்ஸ்..!

1 year ago 7
ARTICLE AD

ஆப்பிள் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iPhone 16 மொபைல் போனை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இது iPhone 15 மொபைல் போன் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு விற்பனைக்கு வருகிறது. புதிய மாடல் iPhone 16 ன் தொலைபேசியானது , எப்பொழுதும் விற்பனைக்கு வரும் என்று, இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், 16 குறித்து பலவிதமாக தகவல்கள் வருவதை சமூக வலைதளங்கள் வருவதை பார்க்க முடிகிறது. இந்த தருணத்தில் ஐபோன் 15, மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தள்ளுபடி:

அது என்னவென்றால், இணையதளத்தின் வழியாக வர்த்தகத்தை மேற்கொள்ளும் ஃப்ளிகார்ட் தளத்தில் மொபைல்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி விற்பனையானது வரும் ஆகஸ்ட் 26 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​Flipkart ஐபோன் 15 இன் 128GB மொபைலானது ரூ. 64,999 க்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது, இதன் அசல் விலையான ரூ.79,600 ஆகும். ஆகையால் ரூ.14,601 இன் இந்த விலைக் குறைப்பானது,  எந்த வரிகளும் இணைக்கப்படாமல் கிடைக்கிறது.

மேலும் விலை குறைப்பது எப்படி?

இந்த நேரடி தள்ளுபடிக்கு மேல், Flipkart ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் வழங்குகிறது, இது வர்த்தகம் செய்யப்படும் போனின் நிலை மற்றும் மதிப்பைப் பொறுத்து, விலையை ரூ.42,100 வரை குறைக்கலாம். இருப்பினும், பரிமாற்ற மதிப்பு மாறுபடலாம் மற்றும் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச தொகையை விட குறைவாக இருக்கலாம்.

இந்த தள்ளுபடியின் அளவைக் கருத்தில் கொண்டு, பிளிப்கார்ட் எந்த கூடுதல் வங்கி சலுகைகளையும் ( Debit Card and Credit Card Offers ) ஒப்பந்தத்தில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்வமுள்ள வாங்குபவர்கள் விரைவாகச், இந்த தள்ளுபடி சலுகையை பயன்படுத்தி விற்பனைக் காலம் முடிவதற்குள் வாங்கி கொள்ளவும்.

ஐபோன் 16 அம்சங்கள்?

ஐபோன் 16 தொடரைப் பொறுத்தவரை சற்று பெரிய பேட்டரி, புதிய சிப்செட் மற்றும் சிறிய வடிவமைப்பு மேம்பாடுகள் உள்ளிட்ட சாதாரண மேம்படுத்தல்களை மட்டுமே காணக்கூடும் என்று வதந்திகள் கூறுகின்றன. புதிய மாடல்கள் அதிக விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வாங்கும் முடிவை எடுப்பதற்கு முன், ஐபோன் 16 சீரிஸில் என்ன மேம்படுத்தப்பட்ட பயன்பாடுகள் என்பதைப் பார்க்க வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும்.

Read Entire Article