<p>நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது அதிர்ச்சி அளித்துள்ளது. </p>
<p>படகுடன் கைது செய்யப்பட்ட 10 பேரையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களை மீட்க வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். </p>