Tamilnadu Roundup: தவெக பிரமாண பத்திரம், பள்ளிகளுக்கு 12 நாள் அரையாண்டு விடுமுறை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்

5 hours ago 1
ARTICLE AD

காந்தி மீது உள்ள வன்மத்தால் 100 நாள் வேலை திட்டத்தில் அவரது பெயரை நீக்குவதாக மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வரும் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக தகவல்.

ஈரோட்டில், விஜய் பிரசாரத்திற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்து, அதற்கான உறுதிமொழி பிரமாண பத்திரத்தை காவல்துறையிடம் வழங்கிய தவெகவினர். விதிமுறை மீறல் ஏற்பட்டால் பொறுப்பேற்கும் அமைப்பாளர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12,350-க்கும், ஒரு சவரன் ரூ.98,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை 12 நாட்கள் அரையாண்டு விடுமுறையாக அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை.

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் கண்டறிய உச்சநீதிமன்றம் உத்தரவு. மொழிப் பிரச்னையால் பின் தங்கிய மாணவர்களுக்கான வாய்ப்பை தடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல்.

சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளுக்காக, ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,000 கோடி கடன் வழங்கியதால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்ப்பு.

காவல்துறை அதிகாரிகள் வீடகளில் ஆர்டர்லிகளாக உள்ள போலீசாரை திரும்பப் பெற்று, காவல் பணிக்கு பயன்படுத்த, தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவு.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு  உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை.

வேடசந்தூர் அருகே முன்னால் சென்ற கார் மீது மோதாமல் இருப்பதற்காக, பேருந்தை ஓட்டுநர் திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆம்னி பேருந்து. இவ்விபத்தில் 14 பேர் காயமடைந்தனர்.

Read Entire Article