வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது, தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 100 கி.மீ தென்கிழக்கே இருப்பதாக தென்மண்டல வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புயலானது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் இன்று மாலை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், நகரும் பாதையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணி வரையிலிருந்து மதியம் 1 மணி வரையிலான கால அளவில் பெய்த மழை அளவானது,

மீனம்பாக்கம் : 10.2 செ.மீ
கொளப்பாக்கம் : 10.25 செ.மீ
நுங்கம்பாக்கம் : 9.70 செ.மீ
நந்தனம் : 8.20 செ.மீ
பல இடங்களில் 7.0 செ.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது