Feature Rich SUV: பென்ஸ் காருக்கு டஃப் கொடுக்கும் ரூ.13 லட்சம் SUV - சொகுசு பயணத்திற்கான அம்சங்கள், வசதிகள்

1 month ago 4
ARTICLE AD

Skoda Kushaq Features: சொகுசு பயண அனுபவத்தை வழங்கும் வகையில், இந்த பிரிவில் வேறு எந்த காரிலும் இல்லாத பல அம்சங்களை ஸ்கோடா குஷக் கொண்டுள்ளது.

பென்ஸிற்கு டஃப் கொடுக்கும் ரூ.13 லட்சம் SUV:

பிரீமியம் அம்சங்கள் நிறைந்த, செயல்திறன் மிக்க எஸ்யுவி பட்ஜெட்டிற்குள் கிடைக்க வேண்டும் என்பதே கார் பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படி ஒரு எதிர்பார்ப்பை சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிப்படுத்தி இருந்தால், எதிரில் அமர்ந்து கேட்பவர்கள் நிச்சயம் சிரித்து கேலி செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், தற்போதைய நிலைமை அப்படி இல்லை. காரணம் பல கார் உற்பத்தி நிறுவனங்களும் ஒரு காலத்தில் ப்ரீமியம் மாடல்களுக்கு மட்டுமானதே என ஒதுக்கியிருந்த பல அம்சங்களையும் தற்போது பட்ஜெட் காகளிலும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் எளிதில் அணுகக் கூடிய வகையில் மெர்சிடஸ் பென்ஸ் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் ஒரு நம்பகமான கார் மாடல் குறித்து நாம் அறியலாம்.

ஒற்றை ஆளாய் கெத்து காட்டும் ஸ்கோடா குஷக்..!

அம்சங்கள் என்பது விற்பனையை ஊக்குவிக்கும் காரணியாக மாறிவிட்டது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியாளர்கள், தங்களது வாகனங்கள் பல ப்ரீமியம் அம்சங்களை நிரப்பி வருகின்றனர். அந்த வகையிலான ஒரு கார் தான் செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடலாகும். அண்மையில் தான் இந்த கார் ஃபேஸ்லிஃப்ட் அப்க்ரேட்களை பெற்றது. அதில் பல கவனத்தை ஈர்கக்கூடிய பல புதிய அம்சங்களை பெற்றது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க இரண்டு அம்சங்களாக பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ரியர் சீட் மசாஜ் ஆகியவை அமைந்தன. பனோரமிக் சன்ரூஃப் பெரும்பாலான கார்களில் இயல்பான அம்சமாக மாறிவிட்டாலும், மசாஜ் இருக்கைகள் என்பது இந்த பிரிவிற்கு உண்மையிலேயே புதியதாகும்.

ஒரு காலத்தில் இது லக்சரி கார் மாடல்களுக்கு மட்டுமே இந்த வசதி ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த எளிய அணுகல் விலை கொண்ட வெகுஜன சந்தைக்கான கார் மாடலில் அந்த அம்சம் இணைக்கப்பட்டு இருப்பது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. இதன் சகோதரர் மாடலான ஃபோக்ஸ்வாகனின் டைகன் மாடலும் அண்மையில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்றத். ஆனால், இந்த மிட்-சைஸ் எஸ்யுவியில் பின்புற மசாச் இருக்கை சேர்க்கப்படவில்லை. இதனால், எனவே இந்த பிரிவில் பின்புறம் மசாஜ் இருக்கை கொண்ட ஒரே மாடலாக குஷக் திகழ்கிறது. இந்த காரின் டாப் வேரியண்ட்களான ப்ரெஸ்டிஜ் மற்றும் மோண்டே கார்லே ஆகிய இரண்டு மாடல்களில் மட்டுமே இந்த இருக்கை ஆப்ஷன் உள்ளது. அவற்றின் விலை ரூ.16.79 லட்சம் தொடங்கி ரூ.18.99 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. மெர்சிடஸ் பென்ஸில் இந்த அம்சத்தை பெற, அதன் மலிவு விலை மாடலாக சுமார் ரூ.88 லட்சத்திற்கு (எக்ஸ் - ஷோரூம்) விற்பனையாகும் E-Class லாங் வீல் பேஸ் மாடலை அணுக வேண்டியுள்ளது.

ஸ்கோடா குஷக் - இன்ஜின் விவரங்கள்

விலைக்கு நிகரான மதிப்பு மற்றும் தாராளமான அம்சங்களுடன், குஷக்கில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அவை முறையே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிக செயல்திறன் வேண்டும் என நினைப்பவர்கள் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எடிஷனை தேர்வு செய்வார்கள். எளிய அணுகலை விரும்புபவர்கள் 1.0 லிட்டர் டர்போ எடிஷனை விரும்புவார்கள்.  சிறிய இன்ஜின் ஆப்ஷனானது  8 ஸ்பீட் TC மற்றும் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. பெரிய இன்ஜினானது 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. அதிகபட்சமாக லிட்டருக்கு சுமார் 19.66 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Hyundai Safety Features: இனி திருடவே முடியாது..! ஹுண்டாயின் புத்தம் புதிய பாதுகாப்பு அம்சம் - எப்படி வேலை செய்யும்?

ஸ்கோடா குஷக் - அம்சங்கள்

ஸ்கோடா குஷக்கின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை, இந்த காரில் 10.25 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே, 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன், டூயல் கலர் ஆம்பியன்ட் லைட்டிங், பனோரமிக் சன்ரூஃப், பவர் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், முன் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோமேட்டிக் ஏசி, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன. உள்ளூரில் இந்த காரானது ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஃபோல்க்ஸ்வாகன் டைகன் ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.

Read Entire Article