இந்திய உணவுக் கழகம் (FCI) நாடு முழுவதும் உள்ள பல்வேறு அலுவலக பதவிகளுக்கு தகுதியானவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான, அறிவிப்பானது இந்த மாதம் வெளியாக உள்ளது.

இந்திய உணவுக் கழகம்

இந்திய உணவுக் கழகம் (FCI) உணவு தானியங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மையைக் கையாளும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய உணவுக் கழகம் (FCI) வகை 2 மற்றும் வகை 3 பதவிகளின் கீழ் பல்வேறு பதவிகளுக்கு 33,566 காலியிடங்களை இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

ஜூனியர் இன்ஜினியர், ஸ்டெனோகிராபர், தட்டச்சர், வாட்ச்மேன், உதவி கிரேடு III, கிரேடு II மற்றும் கிரேடு IV போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசு வேலைக்குச் செல்ல விரும்புவர்கள், இந்த அருமையான பயன்படுத்திக் கொள்ளவும் .
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, ( ஜனவரி 2025 ) இந்த மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போது இருந்தே , இந்த தேர்வுக்கு தயாராவது சிறப்பாகும்.

இந்நிலையில், இந்த பணி குறித்தும், தேர்வு குறித்தும் , விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்தும் பார்ப்போம்.

தேர்ந்தெடுக்கும் முறை

1. ஆன்லைன் தேர்வு
2. திறனறிவு தேர்வு
3. நேர்முகத் தேர்வு

கல்வித் தகுதிகள்:

விண்ணப்பிக்கும் பதவியின் அடிப்படையில் கல்வித் தகுதிகள் மாறுபடும்:

வகை 2 (நிர்வாக பதவிகள்):

சம்பந்தப்பட்ட துறையில் பட்டதாரி/முதுகலை.
சிறப்புப் பதவிகளுக்கு கூடுதல் சான்றிதழ்கள் தேவைப்படலாம்.

வகை 3 (ஜூனியர் இன்ஜினியர், ஸ்டெனோகிராபர், உதவியாளர் போன்றவை):

சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ.
குறிப்பிட்ட பதவிகளுக்கு, தட்டச்சு அல்லது சுருக்கெழுத்தில் தேர்ச்சி கட்டாயம்.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது:

வகை 2 பதவிகள்: 28 ஆண்டுகள்
வகை 3 பதவிகள்: 25 ஆண்டுகள்

வயது தளர்வு:

அரசாங்க விதிமுறைகளின்படி பொருந்தும்.

SC/ST: 5 ஆண்டுகள்
OBC: 3 ஆண்டுகள்
PwBD: 10 ஆண்டுகள்

ஊதியம்:

மாதம் : ரூ. 71,000 வரை ஊதியம் இருக்கும் என தகவல் தெரிவிக்கிறது.

இந்த பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, இந்திய உணவுக் கழகத்தின் சார்பில் இந்த மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Also Read: TN Rain: மக்களே கவனம்.! 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது : வானிலை புது அப்டேட்.!