Fact Check: இந்துசமய அறநிலையத்துறைக்கு இஸ்லாமிய அமைச்சர் நியமனமா? தமிழக அரசு விளக்கம்

3 weeks ago 4
ARTICLE AD

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு இஸ்லாமிய அமைச்சரை நியமித்ததாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக கடந்த 10ஆம் தேதி விஜய் பதவியேற்ற நிலையில், அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண் ராஜ், ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ரமணன், ராஜ்மோகன், காரைக்குடி பிரபு, கீர்த்தனா ஆகியோர் மட்டுமே அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். எனினும் அவர்களுக்கு இதுவரை துறைகள் ஒதுக்கப்படவில்லை.

பெரும்பான்மையை நிரூபித்த தவெக

இன்று (மே 13) நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்டு, தவெக பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இந்த நிலையில், தவெக அமைச்சரவை விரிவாக்கம் தொடங்க உள்ளது.

இதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு இஸ்லாமியரை அமைச்சராக நியமித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்படுகிறது. எனினும் இந்தத் தகவலை தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது.

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறைக்கு
இஸ்லாமிய அமைச்சரை நியமித்ததாக வதந்தி ! @CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/AvM3DHQNVX
— TN Fact Check (@tn_factcheck) May 13, 2026

உண்மை என்ன?

இதுகுறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’இது முற்றிலும் பொய்யான செய்தி.

தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக இந்து சமய அறநிலையத் துறைக்கு அமைச்சரை நியமிக்கவில்லை. ஆனால் அறநிலையத்துறைக்கு ஒரு இஸ்லாமியரை அமைச்சராக நியமித்துள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுகிறது.

வதந்தியைப் பரப்பாதீர்’’ என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

Read Entire Article