ஈரோடு மாவட்டத்தில் அடுத்த வாரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை:

நேற்று (14-11-2025) தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (15-11-2025) காலை 08.30 மணி அளவில், இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

ஈரோட்டுக்கான வானிலை அறிக்கை:

நவம்பர் 15:

குறைந்தபட்ச வெப்பநிலை 21.6°C; அதிகபட்சம் 31.1°C.
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கான வாய்ப்பில்லை

நவம்பர் 16:

21.8°C முதல் 29.8°C வரை வெப்பநிலை.
வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 17:

குறைந்தபட்சம் 21.9°C; அதிகபட்சம் 27.2°C.
மேகமூட்டத்துடன் காணப்படும் வானத்தில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 18:

21.8°C முதல் 27.9°C வரை வெப்பநிலை.
பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் வானில் லேசான முதல் மிதமான மழை அல்லது இடி–மின்னல் ஏற்படலாம்.

நவம்பர் 19:

22.3°C குறைந்தபட்சம்; 30.0°C அதிகபட்சம்.
வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 20:

21.7°C முதல் 30.4°C வரை வெப்பநிலை.
பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

நவம்பர் 21:

குறைந்தபட்சம் 21.7°C; அதிகபட்சம் 29.9°C.
மேகமூட்டம் நிலவும் நிலையில் சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

நாளை மழைக்கான வாய்ப்பு:

நாளை (16-11-25) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.